காதலர் தினமாச்சே! கோலிவுட்டின் லேட்டஸ்ட் லவ் ஜோடி இவங்கதான்.. இந்த வருஷம் கல்யாணம் பண்ணிருவாங்களா?

By

Recommended Video

Top actress in Tamil cinema is ready for marriage | Kollywood Gossip

சென்னை: கோலிவுட்டின் லேட்டஸ்ட் காதல் ஜோடிகள் இவர்கள, இந்த வருடம் திருமண வாழ்க்கைக்குள் வருவார்கள் என்று சொல்கிறார்கள்

சினிமாவில் நடிகர், நடிகைகளின் காதலை பார்த்த ரசிகர்களுக்கு அவர்களின் நிஜ காதலை அறிய ஆவல் இருக்காதா என்ன?

முன்பெல்லாம் காதல் விஷயங்களை நடிகர், நடிகைகள் ரொம்ப ரகசியமாக பொத்தி பொத்தி வைத்திருப்பார்கள். பிறகு திடீரென அறிவிப்பார்கள்.

காதலர் தினமாச்சே

காதலர் தினமாச்சே

'இன்று அப்படியில்லை, இந்தாங்க இவரைத்தான் காதலிக்கிறேன் என்று சமூக வலைத்தளங்களில் வலுக்கட்டாயமாக வந்து பதிவிடுகிறார்கள். அதற்கு லைக்குகள் வாழ்த்துகளும் குவியும். மீடியாக்களும் அவர்களின் அந்த காதலை பரபரப்பாக்கும். இன்று காதலர் தினமாச்சே... அப்படி காதலில் விழுந்திருக்கும் சில கோலிவுட் காதலர்கள் பற்றிய தகவலை சொல்லாவிட்டால் எப்படி? அதான் இப்படி.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

கடந்த சில வருட ரொமான்டிக் ஜோடி. ஒன்றாகவே சுற்றி, ஒன்றாகவே விழாக்களுக்குச் செல்வது, ஃபாரின் டூர் பறப்பது என்று காதல் வளர்த்த இந்த ஜோடி, சமீபகாலமாக கோயில்களுக்கு ரவுண்ட் அடித்து வருகிறது. இதனால், இந்த வருடம் கல்யாணம் செய்துகொள்வார்கள் என்று கூறுகிறார்கள், கோடம்பாக்கத்தில். ஆனால் இருவரும் காதல் பற்றியும் கல்யாணம் பற்றியும் பேசுவதில்லை.

விஷால், ஜ்வாலா கட்டா

விஷால், ஜ்வாலா கட்டா

காதல் மனைவியை விவாகரத்து பெற்ற பிறகு பேட்மின்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவை காதலித்து வருகிறார் விஷ்ணு விஷால். சமீபத்தில் இதை அறிவித்திருந்தார் விஷ்ணு. பிறகு இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது வைரலானது. புத்தாண்டு தொடக்கத்தில் புதிய தொடக்கங்கள் என்று விஷ்ணுவிஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனால் இந்த காதல் ஜோடி, இந்த வருடம் திருமணம் செய்துகொள்ளும் என்று தெரிகிறது.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, பிசியாகிவிட்டார் பிரியா பவானி சங்கர். நடிகைக்கு ஏக டிமாண்ட். சமீபத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இவரை காதலிப்பதாகக் கூறியதாகவும் அதை பிரியா மறுத்ததாகவும் செய்திகள் பரபரப்பாக, இதுதான் என் காதலர் என அறிவித்தார் பிரியா பவானி சங்கர். பிரியாவின் கல்லூரி தோழரான அந்த காதலர், ராஜவேல். இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறாராம்.

மடோனா செபாஸ்டியன்

மடோனா செபாஸ்டியன்

தமிழில் கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் மலையாள இசை அமைப்பாளர் ரோபி ஆப்ரஹாம் என்பவரை காதலித்து வருகிறார். இதுபற்றி சமீபத்தில் மறைமுகமாக அறிவித்திருந்தார் மடோனா. இவர்கள் புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வைரலாயின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X