»   »  இந்த வார கோலிவுட் 'பாக்ஸ் ஆபிஸ்'!

இந்த வார கோலிவுட் 'பாக்ஸ் ஆபிஸ்'!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில், தொடர்ந்து மலைக்கோட்டை முதலிடத்தில் இருந்து வருகிறது. அர்ஜூனின் மருதமலைக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. ப்ருத்வி, கார்த்திகாவின் நடிப்பில் வெளியாகியுள்ள நாளைய பொழுதும் உன்னோடு 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மலைக்கோட்டை அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது. பூபதி பாண்டியனின் வேகம் நிறைந்த திரைக்கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளிக்கு வரும் புதிய படங்கள் ஓடத் தொடங்கும் வரை மலைக்கோட்டை தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்கும் என்பது திரையுலகின் கணிப்பு.

விஷாலின் வித்தியாசமான நடிப்பு, அதிரடி ஆக்ஷன், ப்ரியா மணியின் ஜிலீர் கவர்ச்சி என வெற்றிப் படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்திருப்பதால் மலைக்கோட்டை தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்கிறது.

படத்தின் முக்கிய பலம், ஊர்வசி, ஆசிஷ் வித்யார்த்தியின் கலக்கல் காமெடிதான்.

அர்ஜூனின் மருதமலை வடிவேலுவின் அதிரடி காமெடியால் தொடர்ந்து நல்ல வரவேற்புடன் படம் கலக்கி வருகிறது. ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் மருதமலை வெற்றிப் படமாகியுள்ளது.

பாண்டியராஜன் மகன் ப்ருத்வி, தூத்துக்குடி நாயகி கார்த்திகாவின் அசத்தல் நடிப்பால் நாளைய பொழுது உன்னோடு 3வது இடத்தைப் பிடித்து சாதித்துள்ளது. நல்ல திரைக்கதை, வித்தியாசமான கிளைமாக்ஸ், மெருகேறிய ப்ருத்வி, கார்த்திகாவின் நடிப்பு படத்துக்கு நல்ல பலத்தைக் கொடுத்துள்ளது.

ஜீவாவின் கற்று தமிழ் அவரது முந்தைய படங்கள் போல சூடாக இல்லை. இருந்தாலும் வித்தியாசமான கதை என்பதால் ரசிகர்ளைக் கவர்ந்துள்ளது.

5வது இடத்தில் ரஞ்சித், விவேக்கின் கலக்கல் காமெடியில் உருவாகியுள்ள பசுபதி மே.பா. ராசக்காபாளையம் உள்ளது. ரஞ்சித்துக்கு இது நிச்சயம் வெற்றிப் படம். விவேக்கின் காமெடி கலக்கலாக உள்ளதால் அனைத்து சென்டர்களிலும் இப்படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

Read more about: kollywood, movies, top 5

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil