கல்யாண சாப்பாடு எப்போ போடுவாங்கன்னு தெரியலையே? திருமணத்தை தள்ளிப் போட்டு வரும் கோலிவுட் நடிகைகள்!

சென்னை: திருமணம் செய்து கொண்டால் எங்கே சினிமாவில் மார்க்கெட் குறைந்து விடுமோ என்கிற அச்சத்தால் பொதுவாக நடிகைகள் திருமணத்தையும் குழந்தை பெற்றுக் கொள்வதையும் தள்ளிப் போடுகின்றனர்.

கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா உலகையே கலக்கி வரும் முன்னணி நடிகைகள் பலரின் திருமண வைபவம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

நடிகை நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட டாப் ஹீரோயின்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அனுஷ்காவுக்கு எப்போ

அனுஷ்காவுக்கு எப்போ

வரும் நவம்பர் 7ம் தேதியுடன் 40 வயதை கடந்து விடுவார் நடிகை அனுஷ்கா. நடிகர் பிரபாஸ் உடன் காதல் என பாகுபலி பட சமயத்தில் பரவிய வதந்திகளை இருவரும் மறுத்து விட்டனர். நடிகை அனுஷ்காவுக்கு எப்போது தான் திருமணம் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீவிரமாக அனுஷ்காவின் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் அவ்வப்போது வதந்திகளே வலம் வருகின்றன. விரைவில் நல்ல செய்தி சொல்வார் என எதிர்பார்க்கலாம்.

சம்மதித்தாரா நயன்தாரா

சம்மதித்தாரா நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆறு வருடமாக காதலித்து வரும் நடிகை நயன்தாரா அவரை எப்போது திருமணம் செய்து கொள்வார் என ஏகப்பட்ட ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாகவும் வதந்திகள் கிளம்பின. அப்பாவின் ஆசையை தீர்க்க திருமணத்திற்கு ஓகே சொல்லி உள்ளார் நயன் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

திரிஷாவின் திருமணம்

திரிஷாவின் திருமணம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவுக்கு கடந்த 2015ம் ஆண்டு தொழிலதிபர் வருண் மணியன் உடன் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த திருமணம் நடைபெறவில்லை. அடுத்ததாக பாகுபலி நடிகர் ராணாவுடன் ஏற்பட்ட காதலும் சக்சஸ் ஆகவில்லை. கடந்த ஆண்டு சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் திருமணம் ஆகப் போவதாக வதந்திகள் வைரலாகின. 38 வயதாகும் நடிகை திரிஷா எப்போதுதான் கல்யாண சாப்பாடு போடப்போகிறார் என தெரியவில்லை.

திருமண வதந்திகள்

திருமண வதந்திகள்

தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷை சுற்றியும் அடிக்கடி திருமண வதந்திகள் வைரலாகி வருகின்றன. அரசியல்வாதி என்றும் தொழிலதிபர் என்றும் ஏகப்பட்ட பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

தாமதிக்கும் தமன்னா

தாமதிக்கும் தமன்னா

15 வயதில் கேடி எனும் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் தமன்னா. 16 ஆண்டுகள் மேல் இந்தியளவில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா இன்னமும் தனது திருமணம் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தாமதிக்காமல் சட்டுபுட்டுன்னு திருமணம் பண்ணிக்கோங்க தமன்னா என ஏகப்பட்ட ரசிகர்கள் காதல் கோரிக்கைகளையும் விட்டு வருகின்றனர்.

அடுத்து ஹன்சிகா தான்

அடுத்து ஹன்சிகா தான்

நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது 50வது படமான மஹா படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகை ஹன்சிகா. அதளபாதாளத்திற்கு சென்ற தனது மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஹன்சிகா எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது பில்லியன் டாலர் கேள்வி தான்.

இரண்டாவது பாய் ஃபிரண்ட்

இரண்டாவது பாய் ஃபிரண்ட்

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தனது இரண்டாவது பாய் ஃபிரண்டான சாந்தனு ஹசாரிகாவுடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகிறார். மும்பையில் இருந்து சென்னைக்கு காதலரை அழைத்து வந்து தனது அப்பாவிடம் அறிமுகப்படுத்திய ஸ்ருதிஹாசனும் விரைவில் நல்ல சேதி சொல்வார் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X