கொஞ்சம் காபி... கொஞ்சம் காதல்!

விஜய் டிவியின் புரொக்ராம் மேனேஜராக இருந்த வெங்கி இயக்கியுள்ள முதல் படம் இது. டெல்லியைச் சேர்ந்த அதிதி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் பிரபல மாடல் அழகி. இவருக்கு ஜோடி இருதயராஜ்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் வெங்கி கூறுகையில், இந்தப் படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். காதல்தான் படத்தின் கரு. அதை அனுபவித்து சொல்லியிருக்கிறோம். நிச்சயம் இன்றைய தலைமுறை ரசிக்கும் படமாக இருக்கும், என்றார்.
இந்தப் படத்தை அறிமுகப்படுத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரஸ் மீட்டில், வித விதமான காபியை அறிமுகப்படுத்தி வைத்தியதோடு, செய்தியாளர்களை ருசிக்கவும் வைத்தார் இயக்குநர்.
காபியெல்லாம் வித்தியாசமாகத்தான் இருந்தது.... வித்தியாசம் ஓவர்டோஸாகி படம் கசக்காம இருந்தா சரி!
Comments


Click it and Unblock the Notifications