»   »  ஆஹாஹாஹாஹாஹாஹாஹா.. மறக்க முடியாத குமரி முத்து!

ஆஹாஹாஹாஹாஹாஹாஹா.. மறக்க முடியாத குமரி முத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஆனால் குமரிமுத்துக்கு அந்த சிரிப்புதான் அடையாளம். சிரிப்பு நடிகர்களால் மற்றவர்கள்தான் சிரிப்பார்கள். ஆனால் இவரது சிரிப்புதான் இவரது அடையாளமாகவும் மாறியது எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.

தனது கண்ணையும் கூட தனது பலமாக மாற்றிக் கொண்டவர் குமரி முத்து. இவரது சிரிப்பும், இவர் நடித்த காட்சிகளும் மறக்க முடியாதவை.

கடைசி வரை திமுக காரராகவே இருந்து மறைந்தவர் குமரி முத்து. தான் உண்டு, தனது வேலை உண்டு என்றும் இருந்தவர். அமைதியானவர், அன்புள்ளம் கொண்டவர்.

 நாடக நடிகர்

நாடக நடிகர்

குமரி முத்து அடிப்படையில் நாடக நடிகர். மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் சினிமாவுக்கு வந்தார். 60களின் இறுதியில் நடிக்க அவர் அவர் நடிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம்.

 எம்.ஜி.ஆர். - சிவாஜி

எம்.ஜி.ஆர். - சிவாஜி

எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களில் ஆரம்பித்த இவரது நடிப்பு அஜீத், விஜய் வரையும் தொடர்ந்தது. நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு வலம் வந்தவர் குமரி முத்து.

சிரிப்பு

சிரிப்பு

ஆஹாஹாஹாஹா என்று இவர் சிரிக்கும் ஸ்டைலே தனி. அந்த சிரிப்புதான் குமரிமுத்துவின் அடையாளமாகவும் மாறிப் போனது.

 மறக்க முடியாத படங்கள்

மறக்க முடியாத படங்கள்

இவரது நடிப்பில் நண்டு, கோழி கூவுது, ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் காமெடி பேசப்பட்டது.

 பாக்யராஜுடன்

பாக்யராஜுடன்

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் இவர் காமெடியில் கலக்கியிருப்பார். வெகுவாகப் பேசப்பட்டது இவரது கேரக்டர்.

 திமுக பேச்சாளர்

திமுக பேச்சாளர்

கடைசி வரை தனது கொள்கையிலிருந்து இறங்காமல் திமுகவில் செயல்பட்டு வந்தவர் குமரிமுத்து. திமுகவில் மேடைப் பேச்சாளராக வலம் வந்தவர். பதவி என்று எதையும் எதிர்பார்க்காமல் செயல்பட்டவர்.

சிலரை மறக்க முடியாது... அந்த வரிசையில் குமரிமுத்துக்கும் இடம் உண்டு.

English summary
Veteran comedy actor Kumarimuthu is no more.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil