»   »  மந்திராவுடன் சுழலும் கும்ப்ளே!

மந்திராவுடன் சுழலும் கும்ப்ளே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மந்திரப் பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே கிரிக்கெட்டை தற்காலிகமாக விட்டு விட்டு கபால் என சினிமாவுக்குத்தாவுகிறார். அவருடன் மந்தார அழகி மந்திரா பேடியும் நடிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள், இந்தி சினிமாவில் தலையைக் காட்டுவது புதிய விஷயம் இல்லை. முன்பு அஜய்ஜடேஜா, வினோத் காம்ப்ளி, சலீல் அங்கோலா ஆகியோர் சினிமாவில் நடித்தனர். கபில்தேவைக் கூட நடிக்கவைக்க முயற்சிகள் நடந்தன.

அந்த வரிசையில் இப்போது கிரிக்கெட் ஜென்டில்மேன் கும்ப்ளேவும் நடிக்க வருகிறார். மராத்தி திரைப்படஇயக்குநர் சந்திரகாந்த் குல்கர்னி இயக்கும் மீராபாய் நாட் அவுட் என்ற படத்தில்தான் தலையைக் காட்டுகிறார்கும்ப்ளே.

கும்ப்ளே கிரிக்கெட் வீரர் கும்ப்ளேவாகவே நடிக்கிறாராம். அவருடன் கிரிக்கெட் ரசிகை வேடத்தில் மந்திரா பேடிநடிக்கவுள்ளார். மந்திராவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கடந்த உலக கோப்பைப் போட்டியின்போதுகாமெண்ட்டராக வந்து மந்திரா காட்டிய மந்தார போஸ்கள், மக்கள் மனதில் இன்னும் நிழலாடி தூக்கத்தை தூரத்தூக்கிப் போட்டு வருகின்றன.

கிரிக்கெட் கிளாமரைப் பயன்படுத்தி சில படங்களிலும் நடித்து முடித்து விட்டார் மந்திரா. அட, நம்ம சிம்புபையன் கூட தனது மன்மதன் படத்தில் மந்திராவைக் கூட்டி வந்து கும்மாக ஒரு பாட்டைப் போட்டுத் தாக்கிவிட்டார்.

அப்படிப்பட்ட மந்திரா இப்படத்தில் நடிப்பதால் படம் குறித்த ஆவல் எகிறியுள்ளது. இதிலும் பின்னுவாரா மந்திராஎன்பது தெரிய வில்லை.

வெயிட்டான நடிகர் அனுபம்கெர் படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். கிரிக்கெட்டைப் பின்னணியாகக்கொண்ட கதையாம் இது. கிரிக்கெட் ரசிகனுக்கும், மந்திராவுக்கும் இடையிலான கதையாக இதைஉருவாக்கியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் பார்த்தாலே படம் செமையாக வசூல் கொடுத்து விடும்என்பதால் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமாம்.

அந்தோணி கோன் ஹை படத்தின் இயக்குநரான ராஜ் கெளஷல்தான் இப்படத்தை இயக்குகிறார். இவர் வேறுயாருமல்ல, நம்ம மந்திராவோட ஆத்துக்காரர்தான் (வணக்கம்ணே!). படத்தோட தயாரிப்பாளர்களில் இவரும்ஒருவராம்.

இஜாஸ்கான் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர மகேஷ் மஞ்ரேகரும் படத்தில் இருக்கிறார்.பத்திரிக்கையாளர் பிரித்திஷ் நந்தியின் நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரிக்கிறது.

கும்பளே சுழலில் உலகமே வீழ்ந்தது, இப்போது மந்திராவின் சுழலில் கும்பளே என்ன ஆகப் போகிறார் என்பதைவெயிட் அண்ட் பார்ப்போம்!-

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil