twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பண மோசடி சிக்கலில் குஷ்பு

    By Staff
    |

    பண மோசடி வழக்கில் நடிகை குஷ்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன்வழங்கியுள்ளது. அதே நேரத்தில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்அலுவலகத்தில் தினமும் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது.

    குஷ்புவின் அண்ணனின் மாமனார் குஷ்பு மீது குற்றப் பிரிவு போலீசில் பண மோசடிவழக்கை பதிவு செய்துள்ளார். இதையடுத்து குஷ்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்தார். அதில்,

    எனது சகோதரர் அப்துல்லா கானுக்கும், அமெரிக்காவில் வசிக்கும் வர்க்கியின் மகள்செரியனுக்கும் கடந்த 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    எனது சகோதரர் அப்போது ஜனனி என்ற படத்தைத் தயாரித்தார். இப்படத்திற்குநிதியுதவி செய்ய அப்துல்லாவின் மாமனார் வர்க்கி முன்வந்தார். இருவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க வர்க்கி தரும் பணத்தை என் மூலமாக அப்துல்லாவிடம் கொடுக்கமுடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 26.8.2002 அன்று வர்க்கி 10,400 அமெரிக்க டாலர்களை அனுப்பிவைத்தார். அதன் அப்போதைய மதிப்பு ரூ. 7.8 லட்சமாகும். இந்தத் தொகையை நான்அப்துல்லாவிடம் வழங்கினேன். பணம் பெற்றுக் கொண்டதற்கு எனது சகோதரர்என்னிடம் ரசீதும் வழங்கினார். இதை நான் அமெரிக்காவில் உள்ள வர்க்கிக்குஅனுப்பி வைத்தேன்.

    பணப் பரிவர்த்தனையின்போது எனது சகோதரரும், வர்க்கியும், பெங்களூரில் உள்ளஎனது அடுக்குமாடி வீட்டை விற்கும் ஆவணத்தில் கையெழுத்து கேட்டனர். அந்தஆவணத்தில் எந்த விவரமும் இல்லை. பிறகு நிரப்பிக் கொள்வார்கள் என நினைத்துநான் கையெழுத்துப் போட்டு விட்டேன்.

    வீட்டை விற்பதற்காக நான் பணம் வாங்கியதாக எப்போதும் சொல்லவில்லை.ஆனால் இப்போது வர்க்கி, எனது பெங்களூர் வீட்டை எப்போது தனது பெயருக்குப்பதிவு செய்யலாம் என்று கேட்கிறார். வீட்டை வாங்கத்தான் பணம் கொடுத்ததாகவும்அவர் கூறுகிறார்.

    இந்தப் பணம் எனது சகோதரருக்காக நான் வர்க்கியிடமிருந்து பெற்றுக் கொடுத்தேன்.நிதி நெருக்கடி காரணமாக அந்தப் படமும் இன்னும் வெளியாகவில்லை.

    ஆனால் வர்க்கி என் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.மாமனார், மருமகன் இடையிலான பிரச்சினையில் என்னை இழுத்துள்ளனர். எனக்கும்அந்தப் பணத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எனவே எனக்கு முன் ஜாமீன்வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார் குஷ்பு.

    மனுவை விசா>த்த நீதிபதி ரகுபதி, குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.இன்னும் 2 வாரங்களுக்குள் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம் எனவும், ஜாமீன்பெற்றவுடன் தினமும் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் அலுவலகத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X