»   »  குடும்பத்தோடு வெஸ்ட் இண்டீஸ் பறக்கும் குஷ்பு!

குடும்பத்தோடு வெஸ்ட் இண்டீஸ் பறக்கும் குஷ்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசிக்க குடும்பத்தோடு மேற்கு இந்தியத் தீவுகளுக்குப் பறக்கிறார் நடிகை குஷ்பு.

குஷ்பு ஒரு கிரிக்கெட் பைத்தியம். இந்தியா விளையாடும் போட்டிகளை முடிந்தவரை நேரில் பார்த்து ரசிப்பார். இல்லாவிட்டால் டிவியிலாவதுபார்த்து விடுவார். இல்லாவிட்டால் தலை வெடித்து விடுமாம்.

தற்போது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் போட்டிகளை நேரில் போய் பார்த்து ரசிக்கத் திட்டமிட்டுள்ளாராம்குஷ்பு.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 ரவுண்டு போட்டிகளை குஷ்பு குடும்பத்தோடு பார்க்கப் போகிறாராம். இதற்காக கணவர்சுந்தர்.சி, இரு மகள்களோடு அவர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல்லவுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கப் போவதால், தான் நடித்து வரும் டிவி நிகழ்ச்சிகளை வேகமாக முடித்துக் கொடுத்து வருகிறார். இதேபோலசுந்தர்.சி.யும், தான் நடித்த வரும் வீராப்பு படத்தை வேகமாக முடித்துக் கொடுத்து வருகிறாறாராம்.

பாரத் மாதா கி ஜெய்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil