ஹீரோ .. ஹீரோ ..

By Staff


குஷ்பு எப்போதுமே படு விவரமானவர். சினிமாவில் ஹீரோயின் சான்ஸ் குறைய ஆரம்பித்துவுடனேயே சுந்தர்.சியை கைப்பிடித்து செட்டில் ஆகிவிட்டார்.

சம்பாதித்த பணத்தை படு பத்திரமான இன்வெஸ்ட்மென்டுகளிலும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும் போட்டுள்ள குஷ்புவுக்கு அதன்மூலம் நல்ல வருமானம்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் அப்பார்ட்மெண்ட் கட்டி வாடகைக்கு விட்டதோடு இப்போது சாந்தோமிலும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டி வருகிறார்.

சின்னத் திரை மூலம் குவிஸ், அது இது என நடிப்பையும் விட்டுவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஜெயா டிவியில் நடத்தும் குவிஸ் நிகழ்ச்சி மூலம் குஷ்புவுக்கு நல்ல வருமானம்.

அதே சூட்டோடு அவ்னி டெலிமீடியா என்று சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் டிவி தொடர்களையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

ஜெயா டிவிக்காக கல்கி என்ற தொடரை எடுக்க ஆரம்பித்துள்ள குஷ்பு, சூட்டிங்கை சிங்கப்பூரில் நடத்திக் கொண்டிருக்கிறார். ஜூலை முதல் இந்த 35 வார மெகா தொடர் ஒளிபரப்பாகுமாம்.


இந் நிலையில் படத் தயாரிப்பிலும் இறங்கிவிட்டார் குஷ்பு. கணவர் சுந்தரோடு இணைந்து இரு படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

முதல் படமான கிரியில் அர்ஜூனை ஹீரோவாக்கியிருக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் ரீமா சென். இன்னொருவர் குத்து பட ஹீரோயின் ரம்யா.

இந்தப் படத்தை முடித்துவிட்டு சுந்தர் இயக்க, குஷ்பு தயாரிக்கப் போகும் படத்தில் ஹீரோயினாக தெலுங்கு உலகைச் சேர்ந்த அங்கிதாவை புக் செய்துள்ளார்கள். இதில் ஹீரோவார யுவ கிருஷ்ணா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

ராதிகாவுக்கு ஒரு சன் டிவி போல குஷ்புக்கு ஒரு ஜெயா டிவி.. கூடவே சினிமா தயாரிப்பு... கலக்குங்க குஷ்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X