மணியம்மையாகும் குஷ்பு! இம்சை அரசகடும் எதிர்ப்புகளையும் மீறி பெரியார் படத்தில் பெரியாரின் மனைவி மணியம்மைவேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் குஷ்பு. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்துப் பேசப் போய் கடும்சிக்கலில் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து அவர் மீள ரொம்ப நாட்களாகின. அதன்பின்னர் பேச்சில் காரத்தைக் குறைத்துக் கொண்டார் குஷ்பு.இந்த நிலையில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பெரியார் படத்தில்பெரியாரின் 2வது மனைவியான மணியம்மையின் வேடத்தில் நடிக்க குஷ்புஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் சலசலப்புஎழுந்தது.பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்பாதுகாப்பு இயக்கம் ஆகியவை குஷ்புமணியம்மை வேடத்தில் நடிக்க கடும் எதிர்பப் தெரிவித்தன. மேலும், பெரியார்படத்தின் கேமராமேன் ஆன தங்கர்பச்சானும், குஷ்பு நடிப்பதாக இருந்தால் நான்விலகிக் கொள்கிறேன் என்று இயக்குநர் ஞான. ராஜசேகரனிடம் தெரிவித்தார்.இதனால் குஷ்பு மணியம்மையாக நடிப்பாரா, மாட்டாரா என்பது கேள்விக்குறியானது.இந்த நிலையில் மணியம்மையாக குஷ்பு தான் நடிப்பார் என்பது தற்போதுஅதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. சட்டசபையில், பாமக உறுப்பினர்வேல்முருகன் இதுகுறித்து கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த தமிழக செய்திவிளம்பரத் துறை அமைச்சர் நடிப்பை மட்டும் பாருங்கள், நடிகை யார் என்றுகவலைப்படாதீர்கள் என்றார்.இதன் மூலம் குஷ்பு தான் மணியம்மை வேடத்தில் நடிக்கிறார் என்பதுஉறுதியாகியுள்ளது. பெரியார் படத்தின் 2வது பகுதியில் மணியம்மை குறித்தகாட்சிகள் வருகின்றன. மணியம்மையாக குஷ்பு நடிக்கிறார். இதற்காக இப்போதேதயாராகி வருகிறார் குஷ்பு.பெரியார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்த பகுதிஅக்டோபரில் தொடங்குகிறது. மணியம்மையாக நடிக்க குஷ்புதேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் அவரது நடிப்புத் திறமை மட்டுமல்லாது, தோற்றப்பொருத்தமும் ஒருகாரணம் என்று கூறப்படுகிறது.குஷ்புவின் முகத்தையும், உருவத்தையும் கம்ப்யூட்டர் மூலம் மணியம்மையின்முகத்துடன் பொருத்திப் பார்த்து அதன் பிறகே குஷ்புவை தேர்வு செய்ததாககூறப்படுகிறது.மணியம்மை வேடம் குறித்து குஷ்பு கூறுகையில், எனது 20 ஆண்டுகால திரையுலவாழ்க்கையில் இதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு எழுந்துள்ளஎதிர்ப்புகள் குறித்து நான் கவலைப்படவில்லை. மணியம்மை எப்படி நடப்பார்,எப்படி பேசுவார், அவருடைய மேனரிசங்கள் என்ன என்பதையெலலாம் இப்போதேசேகரிக்க ஆரம்பித்து விட்டேன்.நடிக்கப் போகும் நாளுக்காக காத்துள்ளேன். பெரியார் படத்தைத் தான் எனதுமுதல்படமாக இப்போது நான் கருதுகிறேன். அந்த அளவுக்கு ஆர்வம்அதிகரித்துள்ளது.இதுவரை கிளாமராக நடித்துள்ளேன், கேரக்டர் ரோல் செய்துள்ளேன். ஆனால் இந்தவேடத்தை எனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான தாக கருதுகிறேன்.நான் மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு சிலர்எதிரப்பு தெரிவித்துள்ளது குறித்துகருத்து கூறி எனது நேரத்தையும், சக்தியையும் வீணடிக்க விரும்பவில்லை என்றார்குஷ்பு.கடும் எதிர்ப்புகளை மீறி குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்கவுள்ளதால்படப்பிடிப்பின் பாமக, விடுதலைச்சிறுத்தைகள், தமிழ் பாதுகாப்பு இயக்கம் மற்றும்பல்வேறு மகளிர் அமைப்புகள் இந்த விவகாரத்தை எப்படிக் கையாளப் போகின்றனஎன்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

By Staff

இம்சை அரசகடும் எதிர்ப்புகளையும் மீறி பெரியார் படத்தில் பெரியாரின் மனைவி மணியம்மைவேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் குஷ்பு.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்துப் பேசப் போய் கடும்சிக்கலில் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து அவர் மீள ரொம்ப நாட்களாகின. அதன்பின்னர் பேச்சில் காரத்தைக் குறைத்துக் கொண்டார் குஷ்பு.

இந்த நிலையில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பெரியார் படத்தில்பெரியாரின் 2வது மனைவியான மணியம்மையின் வேடத்தில் நடிக்க குஷ்புஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் சலசலப்புஎழுந்தது.

பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்பாதுகாப்பு இயக்கம் ஆகியவை குஷ்புமணியம்மை வேடத்தில் நடிக்க கடும் எதிர்பப் தெரிவித்தன. மேலும், பெரியார்படத்தின் கேமராமேன் ஆன தங்கர்பச்சானும், குஷ்பு நடிப்பதாக இருந்தால் நான்விலகிக் கொள்கிறேன் என்று இயக்குநர் ஞான. ராஜசேகரனிடம் தெரிவித்தார்.

இதனால் குஷ்பு மணியம்மையாக நடிப்பாரா, மாட்டாரா என்பது கேள்விக்குறியானது.இந்த நிலையில் மணியம்மையாக குஷ்பு தான் நடிப்பார் என்பது தற்போதுஅதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. சட்டசபையில், பாமக உறுப்பினர்வேல்முருகன் இதுகுறித்து கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த தமிழக செய்திவிளம்பரத் துறை அமைச்சர் நடிப்பை மட்டும் பாருங்கள், நடிகை யார் என்றுகவலைப்படாதீர்கள் என்றார்.

இதன் மூலம் குஷ்பு தான் மணியம்மை வேடத்தில் நடிக்கிறார் என்பதுஉறுதியாகியுள்ளது. பெரியார் படத்தின் 2வது பகுதியில் மணியம்மை குறித்தகாட்சிகள் வருகின்றன. மணியம்மையாக குஷ்பு நடிக்கிறார். இதற்காக இப்போதேதயாராகி வருகிறார் குஷ்பு.

பெரியார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்த பகுதிஅக்டோபரில் தொடங்குகிறது. மணியம்மையாக நடிக்க குஷ்புதேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் அவரது நடிப்புத் திறமை மட்டுமல்லாது, தோற்றப்பொருத்தமும் ஒருகாரணம் என்று கூறப்படுகிறது.

குஷ்புவின் முகத்தையும், உருவத்தையும் கம்ப்யூட்டர் மூலம் மணியம்மையின்முகத்துடன் பொருத்திப் பார்த்து அதன் பிறகே குஷ்புவை தேர்வு செய்ததாககூறப்படுகிறது.

மணியம்மை வேடம் குறித்து குஷ்பு கூறுகையில், எனது 20 ஆண்டுகால திரையுலவாழ்க்கையில் இதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு எழுந்துள்ளஎதிர்ப்புகள் குறித்து நான் கவலைப்படவில்லை. மணியம்மை எப்படி நடப்பார்,எப்படி பேசுவார், அவருடைய மேனரிசங்கள் என்ன என்பதையெலலாம் இப்போதேசேகரிக்க ஆரம்பித்து விட்டேன்.

நடிக்கப் போகும் நாளுக்காக காத்துள்ளேன். பெரியார் படத்தைத் தான் எனதுமுதல்படமாக இப்போது நான் கருதுகிறேன். அந்த அளவுக்கு ஆர்வம்அதிகரித்துள்ளது.

இதுவரை கிளாமராக நடித்துள்ளேன், கேரக்டர் ரோல் செய்துள்ளேன். ஆனால் இந்தவேடத்தை எனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான தாக கருதுகிறேன்.

நான் மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு சிலர்எதிரப்பு தெரிவித்துள்ளது குறித்துகருத்து கூறி எனது நேரத்தையும், சக்தியையும் வீணடிக்க விரும்பவில்லை என்றார்குஷ்பு.

கடும் எதிர்ப்புகளை மீறி குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்கவுள்ளதால்படப்பிடிப்பின் பாமக, விடுதலைச்சிறுத்தைகள், தமிழ் பாதுகாப்பு இயக்கம் மற்றும்பல்வேறு மகளிர் அமைப்புகள் இந்த விவகாரத்தை எப்படிக் கையாளப் போகின்றனஎன்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X