twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குஷ்பு, மணியம்மையா?:சூட்டிங்கை தடுப்போம் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிக்க பாமக மீண்டும்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. திராவிடர் கழக தலைவர் பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில்திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.இந்த படத்தில் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிக்க நடிகை குஷ்புஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளன.தமிழ் பெண்களின் கற்பு பற்றி கேலி செய்த குஷ்பு மணியம்மை வேடத்தில்நடிப்பதற்கு தகுதி இல்லாதவர். எனவே, அவரை மாற்ற வேண்டும் என பாமககோருகிறது.இதுகுறித்து சத்யராஜ் கூறுகையில், மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு நூறுசதவீதம் பொருத்தமானவர். அவரது கொள்கை, கருத்து வேறாக இருக்கலாம். அதைஎல்லாம் நடிப்பில் பார்க்கக் கூடாது. எனவே இதை சர்ச்சையாக்க கூடாது என்றார்.எதிர்ப்புகளை கண்டு கவலைப்படாமல் மணியம்மை வேடத்தில் நான் நடித்தேதீருவேன் என்று குஷ்புவும் கூறியுள்ளார்.இந் நிலையில் பவானி தொகுதி பாமக எம்எல்ஏ ராமநாதன் கூறுகையில்,தமிழர்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் போற்றும் தலைவர் தந்தைபெரியார். இவரது வாழ்கை வரலாற்றை சினிமா படமாக பார்ப்பது வரவேற்கத்தக்கது.அப்படிப்பட்ட தலைவரை பற்றி படம் எடுக்கும் போது அதற்கு கரும்புள்ளி போலநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதுகண்டனத்துக்குரியது.தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி இழிவாக பேசி ஏற்கனவே கண்டனத்துக்கு உள்ளானநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை. எனவேஅவரை மாற்றி வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார்.ஈரோடு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் பூவை ஆறுமுகம்கூறுகையில்,சமூக நீதிக்காகவும், பகுத்தறிவுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர் தந்தைபெரியார். தீர்க்கதரிசியான அவரைப்பற்றி சினிமா படம் தயாரிப்பது வருங்காலஇளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பயன் உள்ளதாகவும், தந்தை பெரியாரைப்பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.ஆனால் இந்த படத்தில் மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிப்பதினால்அப்படத்தின் மகத்துவமே போய்விடும். தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும்வகையில் அவர்களின் கற்பு பற்றி பேசிய நடிகை குஷ்பு அப்படத்தில் நடிப்பதற்குசிறிதும் தகுதியற்றவர்.எத்தனையே சிறந்த தமிழ் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களை மணியம்மைவேடத்தில் நடிக்க வைக்க வேண்டும். எனவே பெரியார் படத்தில் இருந்து குஷ்புவைமாற்ற வேண்டும். இல்லை என்றால் டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி ஈரோடுமாவட்ட பாமக சார்பில் போராட்டம் வெடிக்கும். சூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்றுஅதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவோம் என்றார்.குஷ்புவுக்கு வேல்முருகன் மீண்டும் எதிர்ப்பு:இதற்கிடையில் குஷ்பு பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க கூடாது என்று மீண்டும் பாமக எம்எல்ஏ வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ஒருத்தனுக்கு ஒருத்தி என்ரு வாழும் தமிழக பண்பாட்டை குஷ்பு ஏற்கனவே இழிவுபடுத்தினார். தமிழக பெண்களின் கற்பை கொச்சைப் படுத்தினார். எந்தபெண்ணாவது கற்போடு இருக்கிறார்களா? திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா? என்றொல்லாம் கேவலப்படுத்தினார்.கண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில நடிப்பது வேதனை அளிக்கிறது.எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன். பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம்.அது குஷ்புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது. பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.அவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகஅமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம்.நூற்றுக் கணக்கான படங்கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில்மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும். திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பது.புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்மையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடுதமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.தவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்துவந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர்பொருத்தமானவர். மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம்நிறைந்தது.போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப்பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா? அவர் தியாகம்பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருந்தமாகும்.பாமக எம்எல்ஏக்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களைஅர்பணித்துள்ளோம். என்னற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்குதெரியவாய்ப்பில்லை.காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும், ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேசவேண்டும். நக்கல், கிண்டல், கேலி எல்லாம் சினிமாவில் வைத்துக் கொள்ளுங்கள்.குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதா? மேலே விளைகிறதா? பலாப்பழம் மரத்தில்காய்க்கிறதா? நலித்தின் கீழ்காய்கிறதா? என்றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம்.மணியம்மையாக குஷ்பு நடிக்க கூடாது மீறி நடித்தால் தமிழக பெண்கள் அவரை பார்த்துக் கொள்வார்கள். எதிர்ப்பை அவர் பதிவு செய்வார்கள்.மணியம்மையாகும் குஷ்பு!

    By Staff
    |

    பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிக்க பாமக மீண்டும்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

    திராவிடர் கழக தலைவர் பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில்திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.

    இந்த படத்தில் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிக்க நடிகை குஷ்புஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    தமிழ் பெண்களின் கற்பு பற்றி கேலி செய்த குஷ்பு மணியம்மை வேடத்தில்நடிப்பதற்கு தகுதி இல்லாதவர். எனவே, அவரை மாற்ற வேண்டும் என பாமககோருகிறது.

    இதுகுறித்து சத்யராஜ் கூறுகையில், மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு நூறுசதவீதம் பொருத்தமானவர். அவரது கொள்கை, கருத்து வேறாக இருக்கலாம். அதைஎல்லாம் நடிப்பில் பார்க்கக் கூடாது. எனவே இதை சர்ச்சையாக்க கூடாது என்றார்.

    எதிர்ப்புகளை கண்டு கவலைப்படாமல் மணியம்மை வேடத்தில் நான் நடித்தேதீருவேன் என்று குஷ்புவும் கூறியுள்ளார்.

    இந் நிலையில் பவானி தொகுதி பாமக எம்எல்ஏ ராமநாதன் கூறுகையில்,

    தமிழர்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் போற்றும் தலைவர் தந்தைபெரியார். இவரது வாழ்கை வரலாற்றை சினிமா படமாக பார்ப்பது வரவேற்கத்தக்கது.

    அப்படிப்பட்ட தலைவரை பற்றி படம் எடுக்கும் போது அதற்கு கரும்புள்ளி போலநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதுகண்டனத்துக்குரியது.

    தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி இழிவாக பேசி ஏற்கனவே கண்டனத்துக்கு உள்ளானநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை. எனவேஅவரை மாற்றி வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார்.

    ஈரோடு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் பூவை ஆறுமுகம்கூறுகையில்,

    சமூக நீதிக்காகவும், பகுத்தறிவுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர் தந்தைபெரியார். தீர்க்கதரிசியான அவரைப்பற்றி சினிமா படம் தயாரிப்பது வருங்காலஇளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பயன் உள்ளதாகவும், தந்தை பெரியாரைப்பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

    ஆனால் இந்த படத்தில் மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிப்பதினால்அப்படத்தின் மகத்துவமே போய்விடும். தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும்வகையில் அவர்களின் கற்பு பற்றி பேசிய நடிகை குஷ்பு அப்படத்தில் நடிப்பதற்குசிறிதும் தகுதியற்றவர்.

    எத்தனையே சிறந்த தமிழ் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களை மணியம்மைவேடத்தில் நடிக்க வைக்க வேண்டும். எனவே பெரியார் படத்தில் இருந்து குஷ்புவைமாற்ற வேண்டும். இல்லை என்றால் டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி ஈரோடுமாவட்ட பாமக சார்பில் போராட்டம் வெடிக்கும். சூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்றுஅதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவோம் என்றார்.

    குஷ்புவுக்கு வேல்முருகன் மீண்டும் எதிர்ப்பு:

    இதற்கிடையில் குஷ்பு பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க கூடாது என்று மீண்டும் பாமக எம்எல்ஏ வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    ஒருத்தனுக்கு ஒருத்தி என்ரு வாழும் தமிழக பண்பாட்டை குஷ்பு ஏற்கனவே இழிவுபடுத்தினார். தமிழக பெண்களின் கற்பை கொச்சைப் படுத்தினார். எந்தபெண்ணாவது கற்போடு இருக்கிறார்களா? திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா? என்றொல்லாம் கேவலப்படுத்தினார்.

    கண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில நடிப்பது வேதனை அளிக்கிறது.எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன். பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம்.

    அது குஷ்புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது. பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.

    அவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகஅமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம்.

    நூற்றுக் கணக்கான படங்கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில்மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும். திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பது.

    புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்மையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடுதமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.

    தவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்துவந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.

    ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர்பொருத்தமானவர். மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம்நிறைந்தது.

    போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப்பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா? அவர் தியாகம்பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருந்தமாகும்.

    பாமக எம்எல்ஏக்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களைஅர்பணித்துள்ளோம். என்னற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்குதெரியவாய்ப்பில்லை.

    காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும், ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேசவேண்டும். நக்கல், கிண்டல், கேலி எல்லாம் சினிமாவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதா? மேலே விளைகிறதா? பலாப்பழம் மரத்தில்காய்க்கிறதா? நலித்தின் கீழ்காய்கிறதா? என்றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம்.

    மணியம்மையாக குஷ்பு நடிக்க கூடாது மீறி நடித்தால் தமிழக பெண்கள் அவரை பார்த்துக் கொள்வார்கள். எதிர்ப்பை அவர் பதிவு செய்வார்கள்.

    மணியம்மையாகும் குஷ்பு!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X