»   »  நிபந்தனைகள் ரத்து: குஷ்பு கோரிக்கை

நிபந்தனைகள் ரத்து: குஷ்பு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil
Kushboo
சென்னை: கற்பு குறித்துப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை ஜாமீனில் விடுவிக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு தமிழக பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தின.

குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. மேலும், குஷ்புவை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டன.

மேட்டூர் கோர்ட்டில் குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கில் அவகருக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜாமீன் நிபந்தனைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குஷ்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான பாலு என்பவர், குஷ்பு தொடர்ந்து அவதூறாகவே பேசி வருகிறார். அவரது அவதூறுப் பேச்சு இன்னும் நிற்கவில்லை. அவர் மீது அவதூறு வழக்கு தொடரவுள்ளேன். எனவே அவருக்கு விதிக்கப்பட்ட
நிபந்தனைகளை ரத்து செய்யக் கூடாது என்று கோரினார்.

குஷ்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு மாவட்டங்களில் குஷ்பு மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil