»   »  குஷ்புவுக்கு கோவில் கட்டுவோம் சவுண்டு விடும் குஷ்பு

குஷ்புவுக்கு கோவில் கட்டுவோம் சவுண்டு விடும் குஷ்பு

Subscribe to Oneindia Tamil
சவுண்டு விடும் குஷ்பு

நடிகர் சங்கத்தில் மன்னிப்பு கேட்க வந்த தங்கர்பச்சானை நோக்கி சவுண்டு விட்ட நடிகை குஷ்புக்கு எதிராக தமிழகத்தில்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தங்கர்பச்சான் இயக்கிய சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நடித்த மலையாள நடிகையான நவ்யா நாயர், தனதுசிகையலங்கார நிபுணருக்கு தங்கர் ரூ. 600 மிச்சம் வைத்தாகக் கூறி இறுதிக் கட்ட படப்பிடிப்புக்கு வராமல் தகராறு செய்தார்.

இது குறித்து பேட்டி தந்த தங்கர்பச்சான், நடிகைகளை வாய்க்கு வந்தபடி விமர்சித்துப் பேசினார்.

வெறும் பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள் என்று சொன்னதாக அவரது பேட்டி வெளியானது.

அந்தப் பேட்டி நடிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடிகர்சங்கம் அறிவித்ததால், மன்னிப்பு கேட்க சம்மதித்தார் தங்கர்.

குஷ்பு.. ஸ்ரீபிரியா.. விந்தியா:

மன்னிப்பு கேட்கும் தங்கர்பச்சான்

நடிகர் சங்கத்துக்கு மன்னிப்பு கேட்க வந்த அவருக்கு எதிராக மாஜி ஹீரோயின்களான குஷ்பு, ஸ்ரீபிரியாவும், விந்தியாவும்கூச்சல் போட்டனர். அவர்களை விஜய்காந்த் அமைதிப்படுத்தினார். அதிலும் குஷ்பு தான் ரொம்பவே கோபப்பட்டார்.

இதனால் குஷ்புவுக்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒரு தமிழரான தங்கர்பச்சானை வேற்று மொழி நடிகைகள் (குஷ்பு-இந்தி, விந்தியா-தெலுங்கு) முற்றுகையிட்டு தகாதசொற்களால் திட்டித் தீர்த்து தமிழ் மொழி மீதான தங்களது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவரை கண்டிக்கிறவர்களுக்குஅதற்கான யோக்கியதையும், தகுதியும் கிடையாது என்று கண்டித்தார் திருமாவளவன்.

போஸ்டர்..போஸ்டர்

அந்த போஸ்டர்

இந் நிலையில் குஷ்புவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குஷ்பு பத்தினிக்கு கோவில் கட்டுவோம்..

தமிழன் தங்கர்பச்சானை மன்னிப்பு கேட்க வைப்போம்..

இது என்ன தமிழ் நாடா?

வந்தேறி நாய்களின் வேட்டைக்காடா?

என்று கறுப்பு நிறத்தில் இந்த போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.

கடலூர், நெய்வேலி, விருதாச்சலம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் பஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் முன்பாக இந்தபோஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் அடிக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் தமிழர் பாதுகாப்புப் பேரவை என்ற அமைப்பில்சார்பில் வெளியாகியுள்ளன.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more about: posters against kushboo

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil