»   »  மணியம்மை குஷ்பு! தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பெரியார் படத்தில் அவரதுமனைவி மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கவுள்ளார்.மோகமுள், பாரதி ஆகிய படங்களை உருவாக்கியவர் ஞானராஜசேகரன். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர் தற்போது பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளார்.பெரியார் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். பெரியாரின் மனைவிகளான நாகம்மைமற்றும் மணியம்மை ஆகியோராக நடிக்கவுள்ள நடிகைகள் குறித்த விவரங்களைஞானராஜசேகரன் வெளியிட்டுள்ளார்.மணியம்மை வேடத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளை அணுகியுள்ளார்ராஜசேகரன். ஆனால் யாரும் நடிக்க முன் வரவில்லையாம்.நடிகை ஸ்னேகாவை அணுகியபோது அவர் மிகவும் தயக்கம் காட்டவே அவரைநிராகரித்து விட்டார் ராஜசேகரன்.இறுதியாக நடிகை குஷ்புதான் மணியம்மை வேடத்தில் நடிக்க முன் வந்துள்ளா.அதேபால நாகம்மை வேடத்தில் நடிக்க மலையாள நடிகை கீது மோகன்தாஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகராஜசேகரன் தெரிவித்துள்ளார்.பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் பெரியார். அவரது போராட்டத்தில் துணையாகநின்றவர் மணியம்மை. அப்படிப்பட்ட பெண்மணி வேடத்தில் நடிப்பது தனக்குரொம்பவும் பெருமையாக உள்ளதாக குஷ்பு கூறியுள்ளார்.ஆனால் பெரியார் படத்தில் நடிக்க நடிகை ஸ்னேகா மறுத்து விட்டது கோலிவுட்டில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்தஸ்னேகா, புதுப்பேட்டையில் விபச்சாரி கேரக்டரில் கூட துணிச்சலாக நடித்தார்.அப்படிப்பட்டவர் தன்னைத் தேடி வந்த அருமையான வாய்ப்பை இப்படித் தவறவிட்டது ஆச்சரியமாக உள்ளதாக கோலிவுட்டில் முனுமுனுக்கிறார்கள்.சரி, பெரியார் குள்ளமாக இருப்பாரே, அந்த கேரக்டருக்கு எப்படி உயரமானசத்யராஜை தேர்ந்தெடுத்தீர்கள் என்று ராஜசேகரனிடம் கேட்டால்,உண்மையில் பெரியார் உயரமானவர்தான். வயது ஆக ஆக அவருக்கு உடல் தளர்ச்சிஏற்பட்டு கூன் விழுந்து, குள்ள மனிதராக மாறி விட்டார். அவரது இளமைக் காலபுகைப்படங்களைப் பார்த்தபோது நானே ஆச்சரியப்பட்டுப் போனேன்.எனவே சத்யராஜை நான் தேர்வு செய்ததில் எந்த தவறும் செய்து விடவில்லை. மேலும்பெரியாரை முழுமையாக உணர்ந்தவர், அவரது கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுஉள்ளவர் என்பதால் சத்யராஜை நான் தேர்ந்தெடுத்தேன் என்றார் ராஜசேகரன்.காரைக்குடியில் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் ராஜசேகரன்.வழக்கமாக ராஜசேகரன் படங்களுக்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜாஇப்படத்திற்கு இசையமைக்கவில்லை. மாறாக வித்யாசாகர் இசையமைக்கவுள்ளார்.

மணியம்மை குஷ்பு! தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பெரியார் படத்தில் அவரதுமனைவி மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கவுள்ளார்.மோகமுள், பாரதி ஆகிய படங்களை உருவாக்கியவர் ஞானராஜசேகரன். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர் தற்போது பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளார்.பெரியார் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். பெரியாரின் மனைவிகளான நாகம்மைமற்றும் மணியம்மை ஆகியோராக நடிக்கவுள்ள நடிகைகள் குறித்த விவரங்களைஞானராஜசேகரன் வெளியிட்டுள்ளார்.மணியம்மை வேடத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளை அணுகியுள்ளார்ராஜசேகரன். ஆனால் யாரும் நடிக்க முன் வரவில்லையாம்.நடிகை ஸ்னேகாவை அணுகியபோது அவர் மிகவும் தயக்கம் காட்டவே அவரைநிராகரித்து விட்டார் ராஜசேகரன்.இறுதியாக நடிகை குஷ்புதான் மணியம்மை வேடத்தில் நடிக்க முன் வந்துள்ளா.அதேபால நாகம்மை வேடத்தில் நடிக்க மலையாள நடிகை கீது மோகன்தாஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகராஜசேகரன் தெரிவித்துள்ளார்.பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் பெரியார். அவரது போராட்டத்தில் துணையாகநின்றவர் மணியம்மை. அப்படிப்பட்ட பெண்மணி வேடத்தில் நடிப்பது தனக்குரொம்பவும் பெருமையாக உள்ளதாக குஷ்பு கூறியுள்ளார்.ஆனால் பெரியார் படத்தில் நடிக்க நடிகை ஸ்னேகா மறுத்து விட்டது கோலிவுட்டில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்தஸ்னேகா, புதுப்பேட்டையில் விபச்சாரி கேரக்டரில் கூட துணிச்சலாக நடித்தார்.அப்படிப்பட்டவர் தன்னைத் தேடி வந்த அருமையான வாய்ப்பை இப்படித் தவறவிட்டது ஆச்சரியமாக உள்ளதாக கோலிவுட்டில் முனுமுனுக்கிறார்கள்.சரி, பெரியார் குள்ளமாக இருப்பாரே, அந்த கேரக்டருக்கு எப்படி உயரமானசத்யராஜை தேர்ந்தெடுத்தீர்கள் என்று ராஜசேகரனிடம் கேட்டால்,உண்மையில் பெரியார் உயரமானவர்தான். வயது ஆக ஆக அவருக்கு உடல் தளர்ச்சிஏற்பட்டு கூன் விழுந்து, குள்ள மனிதராக மாறி விட்டார். அவரது இளமைக் காலபுகைப்படங்களைப் பார்த்தபோது நானே ஆச்சரியப்பட்டுப் போனேன்.எனவே சத்யராஜை நான் தேர்வு செய்ததில் எந்த தவறும் செய்து விடவில்லை. மேலும்பெரியாரை முழுமையாக உணர்ந்தவர், அவரது கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுஉள்ளவர் என்பதால் சத்யராஜை நான் தேர்ந்தெடுத்தேன் என்றார் ராஜசேகரன்.காரைக்குடியில் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் ராஜசேகரன்.வழக்கமாக ராஜசேகரன் படங்களுக்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜாஇப்படத்திற்கு இசையமைக்கவில்லை. மாறாக வித்யாசாகர் இசையமைக்கவுள்ளார்.

Subscribe to Oneindia Tamil
தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பெரியார் படத்தில் அவரதுமனைவி மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கவுள்ளார்.

மோகமுள், பாரதி ஆகிய படங்களை உருவாக்கியவர் ஞானராஜசேகரன். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர் தற்போது பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளார்.

பெரியார் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். பெரியாரின் மனைவிகளான நாகம்மைமற்றும் மணியம்மை ஆகியோராக நடிக்கவுள்ள நடிகைகள் குறித்த விவரங்களைஞானராஜசேகரன் வெளியிட்டுள்ளார்.

மணியம்மை வேடத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளை அணுகியுள்ளார்ராஜசேகரன். ஆனால் யாரும் நடிக்க முன் வரவில்லையாம்.

நடிகை ஸ்னேகாவை அணுகியபோது அவர் மிகவும் தயக்கம் காட்டவே அவரைநிராகரித்து விட்டார் ராஜசேகரன்.

இறுதியாக நடிகை குஷ்புதான் மணியம்மை வேடத்தில் நடிக்க முன் வந்துள்ளா.அதேபால நாகம்மை வேடத்தில் நடிக்க மலையாள நடிகை கீது மோகன்தாஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் பெரியார். அவரது போராட்டத்தில் துணையாகநின்றவர் மணியம்மை. அப்படிப்பட்ட பெண்மணி வேடத்தில் நடிப்பது தனக்குரொம்பவும் பெருமையாக உள்ளதாக குஷ்பு கூறியுள்ளார்.

ஆனால் பெரியார் படத்தில் நடிக்க நடிகை ஸ்னேகா மறுத்து விட்டது கோலிவுட்டில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்தஸ்னேகா, புதுப்பேட்டையில் விபச்சாரி கேரக்டரில் கூட துணிச்சலாக நடித்தார்.

அப்படிப்பட்டவர் தன்னைத் தேடி வந்த அருமையான வாய்ப்பை இப்படித் தவறவிட்டது ஆச்சரியமாக உள்ளதாக கோலிவுட்டில் முனுமுனுக்கிறார்கள்.

சரி, பெரியார் குள்ளமாக இருப்பாரே, அந்த கேரக்டருக்கு எப்படி உயரமானசத்யராஜை தேர்ந்தெடுத்தீர்கள் என்று ராஜசேகரனிடம் கேட்டால்,

உண்மையில் பெரியார் உயரமானவர்தான். வயது ஆக ஆக அவருக்கு உடல் தளர்ச்சிஏற்பட்டு கூன் விழுந்து, குள்ள மனிதராக மாறி விட்டார். அவரது இளமைக் காலபுகைப்படங்களைப் பார்த்தபோது நானே ஆச்சரியப்பட்டுப் போனேன்.

எனவே சத்யராஜை நான் தேர்வு செய்ததில் எந்த தவறும் செய்து விடவில்லை. மேலும்பெரியாரை முழுமையாக உணர்ந்தவர், அவரது கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுஉள்ளவர் என்பதால் சத்யராஜை நான் தேர்ந்தெடுத்தேன் என்றார் ராஜசேகரன்.

காரைக்குடியில் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் ராஜசேகரன்.வழக்கமாக ராஜசேகரன் படங்களுக்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜாஇப்படத்திற்கு இசையமைக்கவில்லை. மாறாக வித்யாசாகர் இசையமைக்கவுள்ளார்.


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil