»   »  சிரஞ்சீவிக்கு அக்கா குஷ்பு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து கஜினி புகழ் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போகும் ஸ்டாலின் என்ற படத்தில் நடிக்கப்போகிறார் குஷ்பு.ஹீரோயினாக த்ரிஷா நடிக்கப் போகும் இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் அக்கா வேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தமாகியிருக்கிறார்.ரொம்ப நாளைக்குப் பின் குஷ்பு தெலுங்குக்குப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகப் போகும் பிரமாண்டமான படைப்பு இது.கற்பு குறித்த தனது பார்வையால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கு உள்ளான குஷ்புவின் படங்கள் தமிழில் ரிலீஸ்ஆவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தான் வேறு மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து முதல்கட்டமாக ஸ்டாலின் வாய்ப்பைப் பிடித்தாராம்.சிரஞ்சீவிக்கு குஷ்பு அக்கா ஆனதை அறிந்து பல இளம் நடிகர்களும் தங்களது படங்களில் அம்மா, அத்தை வேடங்களில்குஷ்புவை நடிக்க வைக்க முயன்று வருகிறார்களாம்.இந்த வாய்ப்புக்களை குஷ்பு தவற விடமாட்டார் என்கிறார்கள். அதே போல மலையாளத்துப் பக்கமும் தனது கவனத்தைத்திருப்பியுள்ள குஷ்பு அங்கும் வாய்ப்பு கிடைத்தால் அசத்தத் தயாராக உள்ளாராம்.கடைசியாக சத்யராஜுடன் நடித்த வெற்றிவேல் சக்திவேல் படத்துக்காக குஷ்புவுக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் தரப்பட்டதாகசொல்கிறார்கள்.இதற்கிடையே குஷ்புவை தனது கட்சியில் வந்து சேருமாறு பார்வர்ட் பிளாக்கின் புதிய தலைவர் நடிகர் கார்த்திக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். நடிகர்களிலேயே பெண்களை மிக அதிகமாகக் கவர்ந்தவர் கார்த்திக் ஒருவர் தான் என்று குஷ்புவழக்கமாகக் கூறுவது உண்டு என்பது நினைவுகூறத்தக்கது.இந் நிலையில் பாலியல் சுதந்திரம் குறித்து புத்தகம் எழுதப் போகிறேன் என்று தனது தோழிகளிடம் கூறி வருகிறாராம் குஷ்பு.(அப்ப இன்னொரு வம்பா?)இதற்கிடையே மயில் என்று ஒரு படத்தை இயக்குனர் பாரதிராஜா தயாரிக்கப் போகிறாராம். அதில் முக்கிய வேடம் கட்டப்போவது குஷ்பு தானாம்.மேக்ஸிம் முகவருக்கு முன் ஜாமீன் இதற்கிடையே குஷ்புவின் ஆபாசப் படத்தை பிரசுரித்த மேக்ஸிம் பத்திரிக்கையின் சென்னை ஏஜென்டுக்கு நிபந்தனையுடன்கூடிய முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தனது முகத்தை டூ பீசில் இருக்கும் வேறு ஒரு பெண்ணுடன் இணைத்து ஆபாசமான புகைப் படத்தை பிரசுரித்த மேக்ஸிம்பத்திரிக்கை மீது குஷ்பு சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பத்திரிகைகளை போலீஸார் பறிமுதல்செய்தனர்.டெல்லியில் உள்ள மேக்ஸிம் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தனிப்படை போலீஸார் சென்று பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர்,வெளியீட்டாளர் ஆகியோரை விசாரிக்க முயன்றனர். இருப்பினும் அவர்கள் கிடைக்கவில்லை.இந் நிலையில் பத்திரிக்கையின் சென்னை ஏஜென்டான குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, 2 வாரங்களுக்கு தினமும் மத்திய குற்றப் பிரிவு காவல்துறைஅலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துமுன் ஜாமீன் வழங்கினார்.

சிரஞ்சீவிக்கு அக்கா குஷ்பு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து கஜினி புகழ் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போகும் ஸ்டாலின் என்ற படத்தில் நடிக்கப்போகிறார் குஷ்பு.ஹீரோயினாக த்ரிஷா நடிக்கப் போகும் இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் அக்கா வேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தமாகியிருக்கிறார்.ரொம்ப நாளைக்குப் பின் குஷ்பு தெலுங்குக்குப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகப் போகும் பிரமாண்டமான படைப்பு இது.கற்பு குறித்த தனது பார்வையால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கு உள்ளான குஷ்புவின் படங்கள் தமிழில் ரிலீஸ்ஆவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தான் வேறு மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து முதல்கட்டமாக ஸ்டாலின் வாய்ப்பைப் பிடித்தாராம்.சிரஞ்சீவிக்கு குஷ்பு அக்கா ஆனதை அறிந்து பல இளம் நடிகர்களும் தங்களது படங்களில் அம்மா, அத்தை வேடங்களில்குஷ்புவை நடிக்க வைக்க முயன்று வருகிறார்களாம்.இந்த வாய்ப்புக்களை குஷ்பு தவற விடமாட்டார் என்கிறார்கள். அதே போல மலையாளத்துப் பக்கமும் தனது கவனத்தைத்திருப்பியுள்ள குஷ்பு அங்கும் வாய்ப்பு கிடைத்தால் அசத்தத் தயாராக உள்ளாராம்.கடைசியாக சத்யராஜுடன் நடித்த வெற்றிவேல் சக்திவேல் படத்துக்காக குஷ்புவுக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் தரப்பட்டதாகசொல்கிறார்கள்.இதற்கிடையே குஷ்புவை தனது கட்சியில் வந்து சேருமாறு பார்வர்ட் பிளாக்கின் புதிய தலைவர் நடிகர் கார்த்திக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். நடிகர்களிலேயே பெண்களை மிக அதிகமாகக் கவர்ந்தவர் கார்த்திக் ஒருவர் தான் என்று குஷ்புவழக்கமாகக் கூறுவது உண்டு என்பது நினைவுகூறத்தக்கது.இந் நிலையில் பாலியல் சுதந்திரம் குறித்து புத்தகம் எழுதப் போகிறேன் என்று தனது தோழிகளிடம் கூறி வருகிறாராம் குஷ்பு.(அப்ப இன்னொரு வம்பா?)இதற்கிடையே மயில் என்று ஒரு படத்தை இயக்குனர் பாரதிராஜா தயாரிக்கப் போகிறாராம். அதில் முக்கிய வேடம் கட்டப்போவது குஷ்பு தானாம்.மேக்ஸிம் முகவருக்கு முன் ஜாமீன் இதற்கிடையே குஷ்புவின் ஆபாசப் படத்தை பிரசுரித்த மேக்ஸிம் பத்திரிக்கையின் சென்னை ஏஜென்டுக்கு நிபந்தனையுடன்கூடிய முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தனது முகத்தை டூ பீசில் இருக்கும் வேறு ஒரு பெண்ணுடன் இணைத்து ஆபாசமான புகைப் படத்தை பிரசுரித்த மேக்ஸிம்பத்திரிக்கை மீது குஷ்பு சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பத்திரிகைகளை போலீஸார் பறிமுதல்செய்தனர்.டெல்லியில் உள்ள மேக்ஸிம் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தனிப்படை போலீஸார் சென்று பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர்,வெளியீட்டாளர் ஆகியோரை விசாரிக்க முயன்றனர். இருப்பினும் அவர்கள் கிடைக்கவில்லை.இந் நிலையில் பத்திரிக்கையின் சென்னை ஏஜென்டான குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, 2 வாரங்களுக்கு தினமும் மத்திய குற்றப் பிரிவு காவல்துறைஅலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துமுன் ஜாமீன் வழங்கினார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து கஜினி புகழ் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போகும் ஸ்டாலின் என்ற படத்தில் நடிக்கப்போகிறார் குஷ்பு.

ஹீரோயினாக த்ரிஷா நடிக்கப் போகும் இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் அக்கா வேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ரொம்ப நாளைக்குப் பின் குஷ்பு தெலுங்குக்குப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகப் போகும் பிரமாண்டமான படைப்பு இது.

கற்பு குறித்த தனது பார்வையால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கு உள்ளான குஷ்புவின் படங்கள் தமிழில் ரிலீஸ்ஆவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தான் வேறு மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து முதல்கட்டமாக ஸ்டாலின் வாய்ப்பைப் பிடித்தாராம்.


சிரஞ்சீவிக்கு குஷ்பு அக்கா ஆனதை அறிந்து பல இளம் நடிகர்களும் தங்களது படங்களில் அம்மா, அத்தை வேடங்களில்குஷ்புவை நடிக்க வைக்க முயன்று வருகிறார்களாம்.

இந்த வாய்ப்புக்களை குஷ்பு தவற விடமாட்டார் என்கிறார்கள். அதே போல மலையாளத்துப் பக்கமும் தனது கவனத்தைத்திருப்பியுள்ள குஷ்பு அங்கும் வாய்ப்பு கிடைத்தால் அசத்தத் தயாராக உள்ளாராம்.

கடைசியாக சத்யராஜுடன் நடித்த வெற்றிவேல் சக்திவேல் படத்துக்காக குஷ்புவுக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் தரப்பட்டதாகசொல்கிறார்கள்.

இதற்கிடையே குஷ்புவை தனது கட்சியில் வந்து சேருமாறு பார்வர்ட் பிளாக்கின் புதிய தலைவர் நடிகர் கார்த்திக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். நடிகர்களிலேயே பெண்களை மிக அதிகமாகக் கவர்ந்தவர் கார்த்திக் ஒருவர் தான் என்று குஷ்புவழக்கமாகக் கூறுவது உண்டு என்பது நினைவுகூறத்தக்கது.

இந் நிலையில் பாலியல் சுதந்திரம் குறித்து புத்தகம் எழுதப் போகிறேன் என்று தனது தோழிகளிடம் கூறி வருகிறாராம் குஷ்பு.(அப்ப இன்னொரு வம்பா?)

இதற்கிடையே மயில் என்று ஒரு படத்தை இயக்குனர் பாரதிராஜா தயாரிக்கப் போகிறாராம். அதில் முக்கிய வேடம் கட்டப்போவது குஷ்பு தானாம்.

மேக்ஸிம் முகவருக்கு முன் ஜாமீன்


இதற்கிடையே குஷ்புவின் ஆபாசப் படத்தை பிரசுரித்த மேக்ஸிம் பத்திரிக்கையின் சென்னை ஏஜென்டுக்கு நிபந்தனையுடன்கூடிய முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தனது முகத்தை டூ பீசில் இருக்கும் வேறு ஒரு பெண்ணுடன் இணைத்து ஆபாசமான புகைப் படத்தை பிரசுரித்த மேக்ஸிம்பத்திரிக்கை மீது குஷ்பு சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பத்திரிகைகளை போலீஸார் பறிமுதல்செய்தனர்.

டெல்லியில் உள்ள மேக்ஸிம் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தனிப்படை போலீஸார் சென்று பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர்,வெளியீட்டாளர் ஆகியோரை விசாரிக்க முயன்றனர். இருப்பினும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந் நிலையில் பத்திரிக்கையின் சென்னை ஏஜென்டான குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, 2 வாரங்களுக்கு தினமும் மத்திய குற்றப் பிரிவு காவல்துறைஅலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துமுன் ஜாமீன் வழங்கினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil