»   »  குசும் ஜாமீன் மனு தள்ளுபடி!

குசும் ஜாமீன் மனு தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

கன்னட பிரசாத்தின் 3வது மனைவி குசுமின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக கன்னட பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல வழக்குகள்தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் பிரசாத்தின் 3வது மனைவியாக கருதப்படும் குசுமும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு செய்திருந்தார்.

அந்த மனு இன்று நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய அரசு வழக்கறிஞர், பிரசாத்தின் அனைத்துத்தொடர்புகளும், குசுமுக்குத்தான் தெரியும்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதில் பிரசாத்துக்குமூளையாக செயல்பட்டுள்ளார் குசும்.

மேலும் பிரசாத்தின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் இவர்தான் கவனித்து வந்துள்ளார். வழக்கு ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் குசுமை ஜாமீனில்விடக் கூடாது என்று வாதாடினார்.

இதைத் தொடர்ந்து குசுமுக்கு ஜாமீன் வழங்க இயலாது என நீதிபதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மனுவை குசுமின் வழக்கறிஞர் திரும்பப்பெற்றார்.

Read more about: kusums bail plea rejected
Please Wait while comments are loading...