»   »  லட்சியம்-பட விமர்சனம்

லட்சியம்-பட விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபுதேவா-லாரன்ஸ் ராகவேந்திராவின் கலக்கல் ஆட்டத்தில், நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஸ்டைல் படம்தான்லட்சியம்-ஒரு தாயின் சபதம் என்ற பெயரில் தமிழுக்கு வந்துள்ளது.

நடனத்தை கருவாகக் கொண்ட கதை. பிரபு தேவாவை குருவாகக் கொண்ட லாரன்ஸ் ராகவேந்திராவின் கதையைச் சொல்லும் படம்.

கதை ரொம்பச் சிறிசு. ஜெயசுதாவின் மகன்தான் லாரன்ஸ். தனது மகனை சிறந்த டான்ஸராக ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது ஜெயசுதாவின்லட்சியம். இதற்காக சிறு வயதிலிருந்தே மகனை டான்ஸ் கற்றுக் கொள்ள வைக்கிறார்.

ஆனால் லாரன்ஸின் தந்தையோ வேறு டிராக்கில் போகிறார். இன்னொரு பெண்ணை மணப்பதற்காக தனது மனைவியை பைத்தியம் என்ற பட்டம்கட்டி மன நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

இதை அறியும் லாரன்ஸ் தந்தையைத் தீர்த்துக் கட்டுகிறார். அப்படியே சென்னைக்கு ஓடி வருகிறார். அங்குள்ள ஒரு நடனப் பள்ளியில் தரையைச்சுத்தம் செய்யும் வேலை கிடைக்கிறது. வறுமை ஒரு பக்கம் வாட்ட, மறுபக்கம் டான்ஸ் லட்சியம் மனதுக்குள் மாவாட்டுகிறது.

மிகப் பெரிய டான்ஸராக திகழும் பிரபு தேவாவையே தனது குருவாக வரித்துக் கொண்டு யாருடைய துணையும் இல்லாமல் டான்ஸ் கற்கிறார்லாரன்ஸ். ஏகலைவன் போல பிரபு தேவாவை உணர்ந்து உணர்ந்தே அவர் டான்ஸில் கற்றுத் தேர்கிறார்.

இந்த நிலையில் பிரபு தேவாவை எதேச்சையாக சந்திக்க நேருகிறது. அப்போது பிரபு தேவா கால்கள் இல்லாமல் இருப்பதைப் பார்த்துதுணுக்குறுகிறார். லாரன்ஸின் லட்சியத்தையும், வேட்கையையும் அறியும் பிரபு தேவா, உன்னை என்னைப் போல ஒரு டான்ஸராக்கிக் காட்டுகிறேன்என சபதமிட்டு கற்றுத் தருகிறார்.

இறுதியில் லாரன்ஸ் மிகப் பெரிய டான்ஸராக உயருகிறார். தனது தாயின் லட்சியத்தை நிறைவேற்றுகிறார்.

இந்தச் சின்னக் கதையை படு அழகாக படமாக்கியுள்ளார் லாரன்ஸ். இவர்தான் படத்தின் இயக்குநரும். படத்தின் முதல் பாதியில் பிரபு தேவாவின்அட்டகாசமான ஆட்டம், அத்தனை பேரையும் உலுக்கி விடும். அவ்வளவு பிரம்மாதமான ஆட்டம்.

படத்தில் அவருக்கு ஒரே ஒரு டான்ஸ்தான். எதிரிகளால் கால் துண்டிக்கப்பட்ட நிலையிலும், டான்ஸ் வெறி தீராத அவர் தன்னைப் போலவே டான்ஸ்மீது வெறியுடன் திரியும் லாரன்ஸை சிறந்த டான்ஸராக்க உறுதி பூண்டு அவருக்குப் பயிற்சிகொடுக்கும் காட்சிகளில் நடிப்பிலும் கலக்குகிறார் பிரபு தேவா.

லாரன்ஸை ஆட வைத்து தனது எதிரிகளை ஆட்டிப் படைக்கிறார். பிரபுதேவாவின் ஆட்டமும், நடிப்பும் ஏ கிளாஸ் என்றால், லாரன்ஸ் ஏ ஒன் ரகமாககலக்குகிறார்.

டான்ஸில் மட்டுமல்ல நடிப்பிலும், இயக்கத்திலும் தான் ஒரு சூப்பர் மேன் என்பதை நிரூபித்துள்ளார் இப்படத்தில் லாரன்ஸ். குறிப்பாக கிளைமாக்ஸ்காட்சியை படு வித்தியாசமாக படமாக்கியுள்ளார்.

படத்துக்குப் பெரும் பலம் காமரா, இசை, சண்டைக் காட்சிகள்தான். சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது. காமராவில் கவிதை தெரிக்கிறது. மணிசர்மாவின் இசையில் இளமை துடிக்கிறது.

படத்தில் இரு நாயகிகள். ஒருவர் சார்மி, இன்னொருவர் கமலினி முகர்ஜி. இருவருக்கும் பெரிய அளவில் வேலை இல்லை. சார்மியிடம் மட்டும்கவர்ச்சியை கொஞ்சம் போல உருவியிருக்கிறார்கள். கமலினிக்கு இது மற்றும் ஒரு படம்.

நடனப் பிரியர்களுக்கு, லட்சியம் - ஒரு பொன்னுச்சாமி ஹோட்டல் பிரியாணி போல சூப்பர் விருந்து!

Read more about: latchiyam film review

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil