»   »  லாலி பாடப்போகும் லைலா!

லாலி பாடப்போகும் லைலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிரிப்பழகி லைலா வீட்டில் சீக்கிரமே, குவா சத்தம் கேட்கப் போகிறது.

கள்ளழகர் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் களவாடிய லைலா, பல சொத்தைப் படங்களுக்குப் பிறகு பார்த்தேன் ரசித்தேன் மூலம் ஹிட்நாயகியானார். அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் பெரிய ரவுண்டு அடித்தார்.

பிதாமகனில் தனது நடிப்பால் அத்தனை பேரையும் பிரமிக்க வைத்த லைலா, திடீரென கல்யாணம் கட்டிக் கொண்டு ரசிக நெஞ்சங்களில்பிரளயத்தை ஏற்படுத்தி விட்டு மும்பைக்குப் போய் விட்டார்.

அப்பழுக்கற்ற, அழகுச் சி>ப்புக்குச் சொந்தக்காரியான லைலா, இப்போது கணவருடன் படு சமர்த்தாக குடும்பம் நடத்தி வருகிறார். அதற்குப் பரிசாகஒரு முத்துப் பிள்ளையையும் வயிற்றில் சுமந்து வருகிறார்.

சுத்தமாக சினிமாவை மறந்து விட்டு கணவருடன் குடும்பம் நடத்தி வரும் லைலா, இப்போது 3 மாத கர்ப்பிணி. இதனால் அவரை லைலாவின்கணவர் படு கவனமாக கவனித்துக் கொள்கிறாராம். இதற்காக தனது வேலையைக் கூட ஒத்திப் போட்டு விட்டு லைலாவுக்கு பக்கத்திலேயேஇருந்து வருகிறாராம்.

தான் கர்ப்பமாகியுள்ள செய்தியை கோலிவுட்டில் உள்ள தனது பி.ஆர்.ஓவுக்கு தெரிவித்துள்ள லைலா, கல்யாண வாழ்க்கையில் நிம்மதியாகஇருக்கிறேன். எனது கணவர் என்னை அன்பாக பார்த்துக் கொள்கிறார். குழந்தை பிறக்கப் போவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன்.

திருமண வாழ்க்கையில் முதல் அத்தியாயம் எனது குழந்தை. எனவே இனிமேல் சினிமாவை நான் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றுநினைக்கிறேன். சில ஆண்டுகள் கழித்து வேண்டுமானால் அதுகுறித்து யோசிக்கலாம் என்றாராம்.

ஆமாமா, அம்மா வேடத்துக்கு அப்ப பஞ்சம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்!

Read more about: laila is concieved

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil