குத்துக்கும் ரெடி! கல்யாணமானால் என்ன? தொடர்ந்து நடிப்பேன், குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போடவும் தயார் என படுதைரியமாக ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் லைலா.சிரிப்பழகி லைலா தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு அடித்தவர். சுட்டிப் பெண் கேரக்டரா, கூப்பிடு லைலாவைஎனும் அளவுக்கு தனக்கென தனி பாணியை வைத்துக் கொண்டு அசத்தினார் லைலா.தமிழ் தவிர தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள லைலா, திடீரென இயக்குநர் பாலாவுடன் சேர்த்து பலமாககிசுகிசுக்கப்பட்டார். ஆனால் எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் தனது நீண்ட நாள் மும்பைக்காதலரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிப் போனார்.கல்யாணம் செய்து கொண்டு போனாலும் கூட தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி விட்டுத்தான் கல்யாணத்திற்கேபோனார். அதேபோல கல்யாணம், தேனிலவு முடிந்து திரும்பி வந்ததும் மகாசத்திரம் என்ற மலையாளப் படத்தில்நடிக்கப் போய் விட்டார்.தமிழில் திருப்பதி படத்தில் அஜீத்துடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். இப்போது மறுபடியும்சினிமாவில் தீவிரமாக நடிக்க ஆர்வமாக உள்ளார் லைலா. உடனே, கல்யாணத்தில் பிரச்சினையோ என்றசந்தேகம் வேண்டாம். வீட்டில் சும்மா இருப்பதை விட கலைச் சேவை செய்தால் நல்லா இருக்குமே என்றஎண்ணத்தில்தான் மீண்டும் நடிக்க வருகிறாராம் லைலா.தமிழில் திருப்பதிக்குப் பிறகு லைலா நடிக்கவில்லை. இப்போது தீவிரமாக புதிய பட வாய்ப்புகளை தேடஆரம்பித்துள்ளார் லைலா. ஆனால் முன்பு மாதிரி இப்போது சல்லிசாக வாய்ப்பு கிடைத்து விடுமா?கல்யாணமான நடிகைகளை தமிழ் சினிமாவில் அக்கா கேரக்டருக்கோ, அம்மா கேரக்டருக்கோ தான்போடுவார்கள் கோலிவுட்காரர்கள். இதில் விதி விலக்கு ஜோதிர்மயி மட்டுமே. கல்யாணமான அவருக்கு (ஒருகுழந்தை இருப்பதாகக் கூட சொல்கிறார்கள்) தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பாகத்தான் வருகிறது.அதேபோல லைலாவும் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பாரா அல்லது விஜய், அஜீத்துக்கு அக்காவாக நடிப்பாராஎன்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ஆனால் லைலா படு தெளிவாக இருக்கிறார். எனக்கு ரொம்ப வயசாகி விடவில்லை. இன்னும் சின்னப்பொண்ணுதான். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். அக்கா, கொளுந்தியா, மச்சினி கேரக்டர்களில் எல்லாம்நடிக்க மாட்டேன்.எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுத்தால் குத்துப் பாட்டில் நடிக்கவும் எனக்கு எந்த தயக்கம் இல்லை. கிளாமர்நடிப்பும், குத்துப் பாட்டும் சினிமாவில் பிரிக்க முடியாத விஷயங்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்றுபடு எதார்த்தமாக பேசுகிறார்.காதுல விழுந்துச்சா தயாரிப்பாளருங்களே?

By Staff
கல்யாணமானால் என்ன? தொடர்ந்து நடிப்பேன், குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போடவும் தயார் என படுதைரியமாக ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் லைலா.

சிரிப்பழகி லைலா தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு அடித்தவர். சுட்டிப் பெண் கேரக்டரா, கூப்பிடு லைலாவைஎனும் அளவுக்கு தனக்கென தனி பாணியை வைத்துக் கொண்டு அசத்தினார் லைலா.

தமிழ் தவிர தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள லைலா, திடீரென இயக்குநர் பாலாவுடன் சேர்த்து பலமாககிசுகிசுக்கப்பட்டார். ஆனால் எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் தனது நீண்ட நாள் மும்பைக்காதலரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிப் போனார்.

கல்யாணம் செய்து கொண்டு போனாலும் கூட தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி விட்டுத்தான் கல்யாணத்திற்கேபோனார். அதேபோல கல்யாணம், தேனிலவு முடிந்து திரும்பி வந்ததும் மகாசத்திரம் என்ற மலையாளப் படத்தில்நடிக்கப் போய் விட்டார்.

தமிழில் திருப்பதி படத்தில் அஜீத்துடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். இப்போது மறுபடியும்சினிமாவில் தீவிரமாக நடிக்க ஆர்வமாக உள்ளார் லைலா. உடனே, கல்யாணத்தில் பிரச்சினையோ என்றசந்தேகம் வேண்டாம். வீட்டில் சும்மா இருப்பதை விட கலைச் சேவை செய்தால் நல்லா இருக்குமே என்றஎண்ணத்தில்தான் மீண்டும் நடிக்க வருகிறாராம் லைலா.

தமிழில் திருப்பதிக்குப் பிறகு லைலா நடிக்கவில்லை. இப்போது தீவிரமாக புதிய பட வாய்ப்புகளை தேடஆரம்பித்துள்ளார் லைலா. ஆனால் முன்பு மாதிரி இப்போது சல்லிசாக வாய்ப்பு கிடைத்து விடுமா?

கல்யாணமான நடிகைகளை தமிழ் சினிமாவில் அக்கா கேரக்டருக்கோ, அம்மா கேரக்டருக்கோ தான்போடுவார்கள் கோலிவுட்காரர்கள். இதில் விதி விலக்கு ஜோதிர்மயி மட்டுமே. கல்யாணமான அவருக்கு (ஒருகுழந்தை இருப்பதாகக் கூட சொல்கிறார்கள்) தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பாகத்தான் வருகிறது.

அதேபோல லைலாவும் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பாரா அல்லது விஜய், அஜீத்துக்கு அக்காவாக நடிப்பாராஎன்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் லைலா படு தெளிவாக இருக்கிறார். எனக்கு ரொம்ப வயசாகி விடவில்லை. இன்னும் சின்னப்பொண்ணுதான். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். அக்கா, கொளுந்தியா, மச்சினி கேரக்டர்களில் எல்லாம்நடிக்க மாட்டேன்.

எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுத்தால் குத்துப் பாட்டில் நடிக்கவும் எனக்கு எந்த தயக்கம் இல்லை. கிளாமர்நடிப்பும், குத்துப் பாட்டும் சினிமாவில் பிரிக்க முடியாத விஷயங்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்றுபடு எதார்த்தமாக பேசுகிறார்.

காதுல விழுந்துச்சா தயாரிப்பாளருங்களே?

Read more about: laila ready for item numbers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X