பாலிவுட்டில் லைலா தமிழில் ஒரேயொரு படத்தில் நடித்து வரும் லைலாவுக்கு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.மும்பை குல்பி ஐஸ் லைலா, கள்ளழகர் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதற்குப் பிறகு அவ்வளவாக வாய்ப்புஇல்லாமல் இருந்து வந்த இவருக்கு பார்த்தேன் ரசித்தேன் படத்தின் மூலம் ஒரு பிரேக் கிடைத்தது.இதற்குப் பிறகு மளமளவென ஏறுமுகம் தான். பாலாவின் நந்தா மற்றும் பிதாமகனில் லைலாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. ஆனால்யார் கண்பட்டதோ, பிதாமகனுக்குப் பிறகு லைலாவுக்கு இறங்கு முகமாகி விட்டது.யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் வெறுத்துப் போன அவர் கன்னடத்துக்குப் பக்கம் மெல்ல ஒதுங்கிப் பார்த்தார். அங்குசென்றதும் மார்க்கெட் பிடிப்பதற்காக சில தேவையில்லாத டயலாக்குகளை பேசினார்.சமீபத்தில் புதிய தமிழ்ப் படங்களை கர்நாடகத்தில் உடனடியாக வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்துபேசினால் அப்படியே கன்னட மார்க்கெட்டை வளைத்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டார்.ஆனால் லைலாவின் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. இதனால் அடுத்த பிளைட் பிடித்து மும்பைக்கு பறந்து விட்டார். மும்பையிலேயேஇருந்து விட்டால் தமிழ் ரசிகர்கள் தன்னை மறந்து விடப்போகிறார்கள் என்று நினைத்தாரோ என்னவோ உடனடியாக சென்னைக்குப் பறந்துவந்தார்.வந்த வேகத்தில் பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் கண்ட நாள் முதல் என்ற படத்தில் பிரசன்னாவின் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.இந்த சமயத்தில் தான் ரம்பாவைப் போல லைலாவும் சொந்தமாக படம் தயாரிக்கப் போகிறார் என்று பரபரப்பாக பேச்சு அடிபட்டது.ஆனால் இதை லைலா தரப்பு மறுத்துள்ளது. எனக்கு வேண்டாதவர்கள் சிலர் தேவையில்லாமல் இப்படி பொய்யான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். த்ரீ ரோஸஸ்படத்தை எனது தோழி ரம்பா தயாரித்தார். அதில் நானும் நடித்திருந்தேன்.சொந்தமாக ஒரு படத்தை தயாரிப்பது எவ்வளவு கடினமானது என்பதை அப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன். அந்தப் படத்தைதயாரிக்கும் போதும், அதற்குப் பிறகும் ரம்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை நான் நேரடியாகவே உணர்ந்து கொண்டேன்.இவ்வளவு பிரச்சினைகளையும் தெரிந்தே யாராவது அந்த சிக்கலில் மாட்டப் பார்ப்பார்களா? எனக்கு தெரிந்தது நடிப்பு மட்டும் தான். அதை மட்டும் செய்து விட்டுப் போகிறேன் என்று பொரிந்து தள்ளி விட்டார் லைலா.லைலாவைப் பற்றி ஒரு கொசுறு செய்தி: இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம் இவருக்கு. கூடவே 2 கன்னடப் படங்களிலும்திறமையை காட்டி வருகிறாராம்.

By Staff

தமிழில் ஒரேயொரு படத்தில் நடித்து வரும் லைலாவுக்கு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

மும்பை குல்பி ஐஸ் லைலா, கள்ளழகர் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதற்குப் பிறகு அவ்வளவாக வாய்ப்புஇல்லாமல் இருந்து வந்த இவருக்கு பார்த்தேன் ரசித்தேன் படத்தின் மூலம் ஒரு பிரேக் கிடைத்தது.

இதற்குப் பிறகு மளமளவென ஏறுமுகம் தான். பாலாவின் நந்தா மற்றும் பிதாமகனில் லைலாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. ஆனால்யார் கண்பட்டதோ, பிதாமகனுக்குப் பிறகு லைலாவுக்கு இறங்கு முகமாகி விட்டது.

யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் வெறுத்துப் போன அவர் கன்னடத்துக்குப் பக்கம் மெல்ல ஒதுங்கிப் பார்த்தார். அங்குசென்றதும் மார்க்கெட் பிடிப்பதற்காக சில தேவையில்லாத டயலாக்குகளை பேசினார்.

சமீபத்தில் புதிய தமிழ்ப் படங்களை கர்நாடகத்தில் உடனடியாக வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்துபேசினால் அப்படியே கன்னட மார்க்கெட்டை வளைத்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டார்.

ஆனால் லைலாவின் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. இதனால் அடுத்த பிளைட் பிடித்து மும்பைக்கு பறந்து விட்டார். மும்பையிலேயேஇருந்து விட்டால் தமிழ் ரசிகர்கள் தன்னை மறந்து விடப்போகிறார்கள் என்று நினைத்தாரோ என்னவோ உடனடியாக சென்னைக்குப் பறந்துவந்தார்.

வந்த வேகத்தில் பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் கண்ட நாள் முதல் என்ற படத்தில் பிரசன்னாவின் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்த சமயத்தில் தான் ரம்பாவைப் போல லைலாவும் சொந்தமாக படம் தயாரிக்கப் போகிறார் என்று பரபரப்பாக பேச்சு அடிபட்டது.ஆனால் இதை லைலா தரப்பு மறுத்துள்ளது.

எனக்கு வேண்டாதவர்கள் சிலர் தேவையில்லாமல் இப்படி பொய்யான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். த்ரீ ரோஸஸ்படத்தை எனது தோழி ரம்பா தயாரித்தார். அதில் நானும் நடித்திருந்தேன்.

சொந்தமாக ஒரு படத்தை தயாரிப்பது எவ்வளவு கடினமானது என்பதை அப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன். அந்தப் படத்தைதயாரிக்கும் போதும், அதற்குப் பிறகும் ரம்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை நான் நேரடியாகவே உணர்ந்து கொண்டேன்.

இவ்வளவு பிரச்சினைகளையும் தெரிந்தே யாராவது அந்த சிக்கலில் மாட்டப் பார்ப்பார்களா?

எனக்கு தெரிந்தது நடிப்பு மட்டும் தான். அதை மட்டும் செய்து விட்டுப் போகிறேன் என்று பொரிந்து தள்ளி விட்டார் லைலா.

லைலாவைப் பற்றி ஒரு கொசுறு செய்தி: இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம் இவருக்கு. கூடவே 2 கன்னடப் படங்களிலும்திறமையை காட்டி வருகிறாராம்.

Read more about: laila enters in bollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X