லைலாவும், பாலாவும்! தமிழ் சினிமாவை விட்டு லைலா போய் விட்டாலும் கூட இன்னும் அவருக்கும், திரையுலகுக்கும் உள்ள தொடர்பு படுதீவிரமாகத்தான் உள்ளதாம் - பாலாவின் உதவியால்!கள்ளழகர் மூலம் அறிமுகமானாலும் கூட பார்த்தேன் ரசித்தேன்தான் லைலாவுக்கு பிரேக்காக அமைந்தது. அதற்குப் பிறகுஅவருக்கு ஏறுமுகம். நந்தாவில் அவரது நடிப்பு பேசப்பட்டபோது, கூடவே பாலாவும் இணைத்துப் பேசப்பட்டார். பாலாவுக்கும், லைலாவுக்கும் காதல், இருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார்கள் என்று காட்டுத் தீ போல செய்திகள்பரவினாலும், இருவரும் அதை மறுக்கவும் இல்லை, ஆமாம் என்று கூறவும் இல்லை. இப்படியாகப் போய்க் கொண்டிருந்த லைலா, பாலா நடிப்பு மேலும் இறுகியது, பிதாமகன் மூலம். இந்தப் படத்திற்குப் பிறகுநிச்சயம் டும்டும்தான் என்று படு உறுதியாக பேசத் தொடங்கியது கோலிவுட். ஆனால் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்ததுபாலாவின் திடீர் கல்யாணம்.பிதாமகனுக்குப் பிறகு லைலாவுக்கு படங்கள் சரியாக வரவில்லை. ஒரே ஒரு படம்தான் கிடைத்தது. ஆனாலும் கவலைப்படாதலைலா இந்திக்குப் போய் விட்டார். அதன் பிறகு லைலா குறித்து சப்தமே இல்லை.இப்போது மீண்டும் லைலா பேசப்படத் தொடங்கியுள்ளார். படங்கள் இல்லாவிட்டாலும் கூட பாலாவுடன் அவரது பழைய நட்புஇன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறதாம். சென்னையை விட்டு பாலா வேறு எங்கே போனாலும் அவருடன் லைலாவும் சேர்ந்துகொள்கிறாராம். மும்பைக்கு பாலா போனால் தங்குவது லைலாவின் வீட்டில்தானாம். இருவரும் முன்பு போலவே நல்ல நெருக்கமாகவும், நட்பாகவும் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். ஆனால் இதுநல்ல நட்பு, வேறு எந்த உள்ளர்த்தமும் எடுத்துக் காள்ளத் தேவையில்லை என்று பாலா தரப்பு படு தெம்பாக கூறுகிறது.பாலாவின் அடுத்த படத்தில் லைலா நடிக்கக் கூடும் என்று இப்போது கூறுகிறார்கள். அஜீத்தை வைத்து பாலா எடுப்பதாக இருந்தநானே கடவுள், சில காலத்திற்குப் பிறகு எடுக்கப்படுமாம். அதில் லைலாதான் ஹீரோயின் என்று கூறுகிறார்கள்.பாலா, லைலா நட்பு எப்படியோ, லைலாவின் நல்ல நடிப்பைப் பார்க்க இன்னும் கொஞ்சம் ரசிகர்கள் இங்கே இருக்கத்தான்செய்கிறார்கள்!

By Staff

தமிழ் சினிமாவை விட்டு லைலா போய் விட்டாலும் கூட இன்னும் அவருக்கும், திரையுலகுக்கும் உள்ள தொடர்பு படுதீவிரமாகத்தான் உள்ளதாம் - பாலாவின் உதவியால்!

கள்ளழகர் மூலம் அறிமுகமானாலும் கூட பார்த்தேன் ரசித்தேன்தான் லைலாவுக்கு பிரேக்காக அமைந்தது. அதற்குப் பிறகுஅவருக்கு ஏறுமுகம். நந்தாவில் அவரது நடிப்பு பேசப்பட்டபோது, கூடவே பாலாவும் இணைத்துப் பேசப்பட்டார்.


பாலாவுக்கும், லைலாவுக்கும் காதல், இருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார்கள் என்று காட்டுத் தீ போல செய்திகள்பரவினாலும், இருவரும் அதை மறுக்கவும் இல்லை, ஆமாம் என்று கூறவும் இல்லை.

இப்படியாகப் போய்க் கொண்டிருந்த லைலா, பாலா நடிப்பு மேலும் இறுகியது, பிதாமகன் மூலம். இந்தப் படத்திற்குப் பிறகுநிச்சயம் டும்டும்தான் என்று படு உறுதியாக பேசத் தொடங்கியது கோலிவுட். ஆனால் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்ததுபாலாவின் திடீர் கல்யாணம்.

பிதாமகனுக்குப் பிறகு லைலாவுக்கு படங்கள் சரியாக வரவில்லை. ஒரே ஒரு படம்தான் கிடைத்தது. ஆனாலும் கவலைப்படாதலைலா இந்திக்குப் போய் விட்டார். அதன் பிறகு லைலா குறித்து சப்தமே இல்லை.

இப்போது மீண்டும் லைலா பேசப்படத் தொடங்கியுள்ளார். படங்கள் இல்லாவிட்டாலும் கூட பாலாவுடன் அவரது பழைய நட்புஇன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறதாம். சென்னையை விட்டு பாலா வேறு எங்கே போனாலும் அவருடன் லைலாவும் சேர்ந்துகொள்கிறாராம். மும்பைக்கு பாலா போனால் தங்குவது லைலாவின் வீட்டில்தானாம்.


இருவரும் முன்பு போலவே நல்ல நெருக்கமாகவும், நட்பாகவும் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். ஆனால் இதுநல்ல நட்பு, வேறு எந்த உள்ளர்த்தமும் எடுத்துக் காள்ளத் தேவையில்லை என்று பாலா தரப்பு படு தெம்பாக கூறுகிறது.

பாலாவின் அடுத்த படத்தில் லைலா நடிக்கக் கூடும் என்று இப்போது கூறுகிறார்கள். அஜீத்தை வைத்து பாலா எடுப்பதாக இருந்தநானே கடவுள், சில காலத்திற்குப் பிறகு எடுக்கப்படுமாம். அதில் லைலாதான் ஹீரோயின் என்று கூறுகிறார்கள்.

பாலா, லைலா நட்பு எப்படியோ, லைலாவின் நல்ல நடிப்பைப் பார்க்க இன்னும் கொஞ்சம் ரசிகர்கள் இங்கே இருக்கத்தான்செய்கிறார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X