»   »  லைலாவுக்கு டும்..டும்... நடிகை லைலாவுக்கு வரும் ஜனவரி 5ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.விஜய்காந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் மும்பையைச் சேர்ந்த லைலா.இதையடுத்து அஜீத்துடன் தீனா, பிரஷாந்துடன் பார்த்தேன் ரசித்தேன், விக்ரமுடன் தில், பாலாவின் நந்தா, பிதாமகன் உள்பட பலபடங்களில் நடித்தார்.நந்தா சூட்டிங்கின்போது பாலாவுக்கும் லைலாவுக்கும் காதல் ஏற்பட்டு அது அப்படியே அமுங்கியும் போனது. தனதுதிருமணத்துக்குக் கூட லைலாவை பாலா அழைக்கவில்லை.இதனால் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தார் லைலா. நீண்ட நாட்களாக வாய்ப்புக்கள்இல்லாததால் மும்பைக்கே போய்விட்ட லைலாவை கண்ட நாள் படத்தின் மூலம் மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்தார் அதன்தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ்.இப்போது அஜீத்துடன் பரமசிவன் படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் லைலா.சமீபத்தில் பிரஷாந்துடன் ஜோடியாக நடிக்க இவருக்கு சமீபத்தில் இரண்டு வாய்ப்புக்கள் வந்தன. பெட்ரோல் படத்திலும், புலன்விசாரணை பார்ட்-2விலும் லைலாவை புக் செய்யப் போன இயக்குனர்களிடம் அந்த வாய்ப்பை வேண்டாம் என்றுசொல்லிவிட்டார் லைலா.இதற்குக் காரணம் புரியாமல் எல்லோரும் தவித்தனர். இப்போது தான் அந்தக் காரணம் வெளியில் வந்துள்ளது.லைலாவை மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குத் திருமணம் செய்து தர அவரது பெற்றோர்கள் முடிவுசெய்துள்ளார்களாம். திருமணத்துக்கு லைலா ஒப்புக் கொண்டுவிட்டதால் நிச்சயமும் முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள்.வரும் ஜனவரி 5ம் தேதி மும்பையில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் லைலாவுக்குத் திருமணம் நடக்கவுள்ளது. இந்தத்திருமணத்தில் பங்கேற்க தமிழ் சினிமாவில் மிகச் சிலருக்கே அழைப்பு அனுப்பியுள்ளார் லைலா.திருமணம் முடிந்த பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவுள்ளாராம். ஆனால், கொஞ்சம் இடைவெளிவிட்டுத் திரும்பி வருவார்என்கிறார்கள்.

லைலாவுக்கு டும்..டும்... நடிகை லைலாவுக்கு வரும் ஜனவரி 5ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.விஜய்காந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் மும்பையைச் சேர்ந்த லைலா.இதையடுத்து அஜீத்துடன் தீனா, பிரஷாந்துடன் பார்த்தேன் ரசித்தேன், விக்ரமுடன் தில், பாலாவின் நந்தா, பிதாமகன் உள்பட பலபடங்களில் நடித்தார்.நந்தா சூட்டிங்கின்போது பாலாவுக்கும் லைலாவுக்கும் காதல் ஏற்பட்டு அது அப்படியே அமுங்கியும் போனது. தனதுதிருமணத்துக்குக் கூட லைலாவை பாலா அழைக்கவில்லை.இதனால் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தார் லைலா. நீண்ட நாட்களாக வாய்ப்புக்கள்இல்லாததால் மும்பைக்கே போய்விட்ட லைலாவை கண்ட நாள் படத்தின் மூலம் மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்தார் அதன்தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ்.இப்போது அஜீத்துடன் பரமசிவன் படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் லைலா.சமீபத்தில் பிரஷாந்துடன் ஜோடியாக நடிக்க இவருக்கு சமீபத்தில் இரண்டு வாய்ப்புக்கள் வந்தன. பெட்ரோல் படத்திலும், புலன்விசாரணை பார்ட்-2விலும் லைலாவை புக் செய்யப் போன இயக்குனர்களிடம் அந்த வாய்ப்பை வேண்டாம் என்றுசொல்லிவிட்டார் லைலா.இதற்குக் காரணம் புரியாமல் எல்லோரும் தவித்தனர். இப்போது தான் அந்தக் காரணம் வெளியில் வந்துள்ளது.லைலாவை மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குத் திருமணம் செய்து தர அவரது பெற்றோர்கள் முடிவுசெய்துள்ளார்களாம். திருமணத்துக்கு லைலா ஒப்புக் கொண்டுவிட்டதால் நிச்சயமும் முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள்.வரும் ஜனவரி 5ம் தேதி மும்பையில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் லைலாவுக்குத் திருமணம் நடக்கவுள்ளது. இந்தத்திருமணத்தில் பங்கேற்க தமிழ் சினிமாவில் மிகச் சிலருக்கே அழைப்பு அனுப்பியுள்ளார் லைலா.திருமணம் முடிந்த பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவுள்ளாராம். ஆனால், கொஞ்சம் இடைவெளிவிட்டுத் திரும்பி வருவார்என்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

நடிகை லைலாவுக்கு வரும் ஜனவரி 5ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

விஜய்காந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் மும்பையைச் சேர்ந்த லைலா.

இதையடுத்து அஜீத்துடன் தீனா, பிரஷாந்துடன் பார்த்தேன் ரசித்தேன், விக்ரமுடன் தில், பாலாவின் நந்தா, பிதாமகன் உள்பட பலபடங்களில் நடித்தார்.

நந்தா சூட்டிங்கின்போது பாலாவுக்கும் லைலாவுக்கும் காதல் ஏற்பட்டு அது அப்படியே அமுங்கியும் போனது. தனதுதிருமணத்துக்குக் கூட லைலாவை பாலா அழைக்கவில்லை.


இதனால் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தார் லைலா. நீண்ட நாட்களாக வாய்ப்புக்கள்இல்லாததால் மும்பைக்கே போய்விட்ட லைலாவை கண்ட நாள் படத்தின் மூலம் மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்தார் அதன்தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ்.

இப்போது அஜீத்துடன் பரமசிவன் படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் லைலா.

சமீபத்தில் பிரஷாந்துடன் ஜோடியாக நடிக்க இவருக்கு சமீபத்தில் இரண்டு வாய்ப்புக்கள் வந்தன. பெட்ரோல் படத்திலும், புலன்விசாரணை பார்ட்-2விலும் லைலாவை புக் செய்யப் போன இயக்குனர்களிடம் அந்த வாய்ப்பை வேண்டாம் என்றுசொல்லிவிட்டார் லைலா.

இதற்குக் காரணம் புரியாமல் எல்லோரும் தவித்தனர். இப்போது தான் அந்தக் காரணம் வெளியில் வந்துள்ளது.


லைலாவை மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குத் திருமணம் செய்து தர அவரது பெற்றோர்கள் முடிவுசெய்துள்ளார்களாம். திருமணத்துக்கு லைலா ஒப்புக் கொண்டுவிட்டதால் நிச்சயமும் முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

வரும் ஜனவரி 5ம் தேதி மும்பையில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் லைலாவுக்குத் திருமணம் நடக்கவுள்ளது. இந்தத்திருமணத்தில் பங்கேற்க தமிழ் சினிமாவில் மிகச் சிலருக்கே அழைப்பு அனுப்பியுள்ளார் லைலா.

திருமணம் முடிந்த பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவுள்ளாராம். ஆனால், கொஞ்சம் இடைவெளிவிட்டுத் திரும்பி வருவார்என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil