»   »  ஓவர் துள்ளல் லக்ஷா!

ஓவர் துள்ளல் லக்ஷா!

Subscribe to Oneindia Tamil

இதயம் உனக்காக என பெயர் மாற்றி வெளியான துள்ளுற வயசு படத்தில் புதிதாகஒரு குத்துப் பாட்டை சேர்த்துள்ளனர்.

இளசுகளை குறி வைத்து இளமைத் துள்ளலுடன் உருவான படம்தான் துள்ளுற வயசு.இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படத்தை சென்னை, மதுரை உள்ளிட்ட சிலஊர்களில் திரையிட்டனர்.

இப்படத்தில் ராகுல்தான் ஹீரோ, தீபிகா என்கிற கோன் ஐஸ்தான் ஹீரோயின். படுகுளிர்ச்சியான தீபிகா இப்படத்தில் படா கிளாமராக நடித்திருக்கிறார். படத்தை சிலஊர்களில் மட்டும் வெளியிட்ட இயக்குனர் கோபால், ரசிகர்கள் படத்தை எப்படிரசிக்கிறார்கள் என்பதைக் கவனித்தார்.

பின்னர்கள் அவர்கள் விரும்பிய மாற்றங்களை படத்தில் சேர்த்து, இதயம் உனக்காகஎன்று படத்தின் பெயரையும் மாற்றினார். இப்போது ரசிகர்களுக்காக இன்னொருசூப்பர் மாற்றத்தையும் செய்துள்ளார்.

அதாவது படத்தில் ஒரு கும்மாங்குத்துப் பாட்டை சேர்த்துள்ளனராம். ஆட்டம்போட்டிருப்பவர் லக்ஷா. அந்தக் கால அலேக் ஆட்டக்கா> பபிதாவின் சீமந்தப்புத்திரிதான் லக்ஷா.

ஏற்கனவே சில படங்களில் குத்தாட்டம் ஆடிய அனுபவம் படைத்த லக்ஷா, இதயம்உனக்காக படத்திற்காக படு ஸ்பெஷலான குத்தாட்டத்தைக் கொடுத்துள்ளாராம்.

லக்ஷாவின் ஆட்டத்தைச் சேர்த்த பிறகுதான் இயக்குனர் கோபாலுக்கு முழு திருப்திவந்ததாம். இதுதான் ரசிகர்களின் திருப்திக்கேற்ற படம் என்ற பரிபூரணமசந்தோஷத்தை அடைந்துள்ளாராம் கோபால்.

அத்தோடு இன்னொரு மாற்றத்தையும் செய்துள்ளாராம். அதாவது படத்தின் பெயரைமறுபடியும் துள்ளுற வயசு என மாற்றி விட்டாராம் கோபால். அடுத்த மாதம் படத்தை3வது முறையாக ரிலீஸ் செய்கிறாராம்.

இங்க பார்றா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil