»   »  லக்ஷா ஆட்டம்-வெட்டிய சென்சார்

லக்ஷா ஆட்டம்-வெட்டிய சென்சார்

Subscribe to Oneindia Tamil

ஆவணித் திங்கள் படத்தில் கள்ளு விற்கும் பெண்ணாக லக்ஷா ஓவர் கவர்ச்சி காட்டி ஆடிய பாடல் காட்சியைசென்சார் நறுக்கிவிட்டது.

ராயர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின சார்பில் கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளராக இருந்தஹரிகிருஷ்ணா என்பவர்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதில் ஹீரோ ஸ்ரீகுமார் என்பவர். ஹீரோவுக்கான எந்த அடையாளமும் இல்லாவிட்டாலும் ஹீரோவாகிக்காட்டிவிட்டார்.

இதில் இவருக்கு தேஜினியும், மதுஷா என இரு குலாப் ஜாமூன்கள் தான் ஜோடிகள்.

படு மதமதர்ப்பாக இருக்கும் இவர்களை படம் பூராவும் முழுக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதிலும் மதுஷாவுக்கு ஒரே படத்தின் மூலம் முன்னணி ஹீரோயின் ஆகிவிடும் ஆசை போல. ஆடையைகண்டமேனிக்கு பறக்கவிட்டு கலக்கியுள்ளார்.

தேஜினி சும்மா இருப்பாரா.. தன் உடம்புக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவை எடுத்துவிட்டுள்ளார். இப்படிஇரண்டு பேரும் ஈக்வலாக ஈடு கொடுத்து நடித்தாலும் கூட படத்தில் ஏதோ ஒன்று குறைவதாகப் பட்டதால்அனுராதவின் புத்திரி லக்ஷாவை கூட்டியாந்து ஒரு குத்து பாட்டும் எடுத்தார்கள்.

நகரத்திலிருந்து கிராமத்துக்குச் செல்லும் இளைஞர்கள் அங்கு கள்ளு குடிப்பது போலவும் ஊத்திய பிறகு கள்ளுவிற்கும் பெண்ணோடு (அவர் தான் லக்ஷா) கும்மாங் டான்ஸ் போடுவது போலவும் பாடல் காட்சியை வைத்தார்ஹரிகிருஷ்ணா.

இந்தப் பாடல் படு ஆபாசமாக எடுக்கப்பட்டதாம். மேலும் பாடல் வரிகளிலும் ஏகப்பட்ட ஆபாசம் தலைகாட்டவே, சென்சார்காரர்கள் கத்திரிக்கோலை எடுத்து பாடல் காட்சியை மொத்தமாகவே மொட்டமழித்துவிட்டார்களாம்.

இதனால் இந்தப் பாடல் காட்சி இல்லாமல் தான் படம் வெளியாகப் போகிறதாம்.

இது குறித்து இயக்குனர் ஹரிகிருஷ்ணா கூறுகையில், அருமையான கிராமிய கதையில் இந்த பாடல் காட்சிவேண்டாம் என்று அதிகாரிகள் கூறினார்கள். அவர்கள் சொன்னதில் நியாயம் இருந்ததால் தூக்கிவிட்டோம்.

ரூ. 5 லட்சம் செலவில் லக்ஷா, 50 துணை நடிகைகள், நடிகர்களை வைத்து இந்தப் பாடலை எடுத்தோம் என்றார்கவலையை மறைத்தபடி.

இதில் நடித்துள்ள தேஜினிக்கு சொந்த ஊர் மும்பை. அங்கு நாடக நடிகையாக இருந்தவராம்.

இதில் லக்ஷாவுக்கு இணையாக கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறார் இன்னொரு ஹீரோயினான மதுஷா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil