நான் அம்மாவா?: லட்சுமி ஆவேசம்!

By Staff
Click here for more images

திரிஷாவுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. இதனால்தான் அபியும் நானும் படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை மறுத்து விட்டேன் என்று மலையாள நடிகை லட்சுமி கோபாலசாமி கூறியுள்ளார்.

பிரகாஷ் ராஜ், மோசர் பெயர் நிறுவனத்துடன் இணைந்து நான்கு படங்களை தயாரித்து வருகிறார். இதில் அபியும் நானும் படமும் ஒன்று. திரிஷா நாயகியாக நடிக்கிறார். நான்கு இளைஞர்கள் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ் அப்பாவாக நடிக்கிறார்.

திரிஷாவின் அம்மா வேடத்தில் நடிக்க முதலில் குஷ்புவை அணுகினர். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதையடுத்து மலையாளப் பட நாயகி லட்சுமி கோபாலசாமியை அணுகினர். அவரும் மறுத்து விட்டார். இதனால் தற்போது நடிகை லட்சுமியின் மகளும் முன்னாள் நாயகியுமான ஐஸ்வர்யா அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்.

திரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்தது ஏன் என்று லட்சுமி கோபாலசாமியிடம் கேட்டபோது, எனக்கு ஒன்றும் வயதாகி விடவில்லை. திரிஷாவை விட நான் 2 வயதுதான் மூத்தவள். நான் தற்போது மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வரும் பிசியான ஹீரோயின்.

எனவேதான் அம்மா, அக்கா வேடத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. அம்மா, அக்கா வேடங்களில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை என்றார்.

More from Filmibeat

Read more about: lakshmi trisha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X