»   »  லீ கிளப்பும் வில்லங்கம்!

லீ கிளப்பும் வில்லங்கம்!

Subscribe to Oneindia Tamil

லீ படம் புதிய வில்லங்கத்துக்கு வித்திட்டுள்ளதாம்.

சத்யராஜ் தனது மகன் சிபியை ஹீரோவாகப்போட்டு எடுத்துள்ள படம் லீ. இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நிலா. இதில் கால்பந்து வீரனாககலக்கலாக நடித்துள்ளார் சிபிராஜ்.

இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு வந்த செய்தியாளர்களுக்கு படத்தைப் பார்க்க பார்க்க பெரும் குழப்பம் மனதில் ஓடியது. அது,படத்தின் வில்லன் கேரக்டர் தமிழகத்தின் மிகப் பிரபலமான ஒரு புள்ளியை ஞாபகப்படுத்துவது போல இருக்கிறதே என்பதுதான்.

விவரம் இதுதான். படத்தோட வில்லன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருக்கிறார். ஹீரோ சிபி சிறந்த கால்பந்து வீரராக இருந்தும் கூடஅவரை இந்திய அணியில் சேர்க்க மறுக்கிறார்.

கொந்தளித்துக் குமுறும் சிபி, ஏன் என்னை சேர்க்க மறுக்கிறீர்கள் என்று நியாயம் கேட்கும்போது, டாக்டர் மகன் டாக்டராக வேண்டும், முதல்வரின்மகன் முதல்வராக வேண்டும்.

எனக்கு எனது ஆட்கள் தான் முக்கியம். நான் இந்த சேருக்கு (பதவிக்கு) ஈசியாக வந்து விடவில்லை. எனது சமூகத்தினரின் ஆதரவுடன்தான் இங்குவந்துள்ளேன். அப்படி இருக்கையில் அவர்களுக்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று டயலாக் விடுகிறார்.

அத்தோடு நில்லாமல், போதைக்கு அடிமையான தனது மகனை இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக்கவும் முயற்சிக்கிறார்.

வில்லனின் கெட்டப்பும் அந்த முக்கியப் புள்ளியை ஞாபகப்படுத்துவது போல உள்ளது.

தமிழகத்தின் முக்கியமான அந்த பெரும் புள்ளியை சித்தரிப்பது போல, அதுவும் வில்லனைப் போல காட்டியிருப்பது ஏன் என்ற கேள்விக்கு லீ படயூனிட் தரப்பிலிருந்து எந்த சத்தத்தையும் காணோம்.

இது தேவையில்லாத குசும்பாகவே படுகிறது. லீ யூனிட்டுக்கு எதுக்கு இந்த வெட்டி வம்போ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil