மிஸ் சின்னத்திரை அழகியாக லீலாவதி தேர்வு!

மிஸ் சின்னத்திரை என்ற பெயரில் ஆண்டுதோறும் டிவி நடிகைகளுக்கான அழகிப் போட்டி நடக்கிறது. விஷன் ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்டும் காஸ்மிக் டவுனும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன.
'விவெல் ஆக்டிவ் பேர் சின்னத்திரை விருது 2011' என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான போட்டி சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் சின்னத்திரை நடிகைகள் சபர்ணா, ஸ்ரீதுர்கா, சபானா, ஜூலி, ஸ்ரவாணி, தரிஷினி, ஸ்ரீலட்சுமி, சக்தி, கவிபிரசாந்தினி, லீலாவதி என 10 சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளினிகள் பங்கேற்றனர்.
ஆடல், பாடல், கேட் வாக்கிங், அறிவுத்திறன் போட்டி என பல சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் முதலிடம் பிடித்து மிஸ் சின்னத்திரை 2011 ஆக தேர்வு பெற்றார் லீலாவதி.
அவருக்கு சென்ன ஆண்டின் சின்னத்திரை அழகி ஸ்வேதா கிரீடம் சூட்டினார். இரண்டாம் இடத்தை ஸ்ரவாணியும் மூன்றாம் இடத்தை சபர்ணாவும் பெற்றனர். விஜய் ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி கேடிவியில் ஒளிபரப்பாகும்.


Click it and Unblock the Notifications











