»   »  மீண்டும் வரும் லீனா!

மீண்டும் வரும் லீனா!

Subscribe to Oneindia Tamil

லீனா சித்துவை ஞாபகம் இருக்கிறதா? வாய்ப்பில்லை, காரணம் அவர் தமிழில்நடித்தது ஒரே ஒரு படத்தில்தான். அந்தப் படமும் சரியாக ஓடாததால், லீனாவைகோலிவுட் மறந்து விட்டது. அந்த லீனா சித்து இப்போது இந்தியில் ஒரு ஆல்பத்திற்குஆடிப் பாடுவதற்காக ஆலப்புழாவில் முகாமிட்டுள்ளார்.

தமிழில் கொஞ்ச காலத்திற்கு முன்பு ஜூனியர் சீனியர் என்று ஒரு படம் வந்தது.மம்முட்டியும், அம்சவிர்தனும் நடித்த படம். அதில் நடித்தவர்தான் லீனா சித்து. அந்தப்படம் ரிலீஸான வேகத்தில் டப்பாவுக்குள் போய் விட்டது. இதனால் லீனாவும்கவனிப்பின்றி கைவிடப்பட்டோர் பட்டியலில் சேர்ந்து விட்டார்.

லீனா சாதாரணமான அழகி இல்லை, மிஸ். மலேசியா பட்டம் வென்ற ஒய்யார அழகி.நெடு நெடு உயரம், கிளுகிளு அழகு, படு சுறுசுறுப்பு என பளீரென இருக்கிறார் லீனா.

தமிழ் கைவிட்டதால் தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்தில்நடித்தார் லீனா. ஆனால் அதுவும் கைவிட்டு விட்டது. இதனால் கடுப்பாகிப் போனலீனா மீண்டும் மலேசியாவுக்கேத் திரும்பிப் போனார்.

இந்த சமயத்தில்தான் இந்தி பாப் ஆல்பங்களில் ஆடிப் பாடும் எண்ணம் அவருக்கவந்தது. அந்த நேரமாகப் பார்த்து கேரளாவைச் சேர்ந்த அஜய்குமார் என்பவர்லீனாவை அணுகி ஆல்பத்திற்கு ஆட வருமாறு கூப்பிடவே யோசிக்காமல் ஓ.கே.சொல்லி விட்டார்.

லீனா ஆடிப் பாடப் போகும் ஆல்பம் இந்தியில் தயாராகிறது. இதன் ஷூட்டிங்ஆலப்புழாவில் நடத்துகின்றனர். இதற்காக ஆலப்புழாவில் லீனா முகாமிட்டுள்ளார்.நல்ல கிளாமருடன் கூடிய இசை ஆல்பமாம் இது. அதனால்தான் ஆலப்புழா பக்கம்லீனாவை கூட்டிக் கொண்டு வந்துள்ளனராம்.

லீனா இதில் தனது முழுத் திறமையையும் எடுத்து விட்டுள்ளாராம். லீனா தவிர இந்திநடிகை தாரா சர்மா, மிஸ். டொரண்டோ பட்டம் வென்ற சானா ஆகியோரும்ஆல்பத்தில் ஆடுகிறார்களாம்.

இந்த ஆல்பம் தனக்கு தென்னிந்தியத் திரையுலகில் புதிய பிரேக்கைக் கொடுக்கும் எனநம்புகிறார் லீனா. இனிமேல் முழு வீச்சில் சினிமா வாய்ப்புகளையும் தேடப்போவதாகவும், அவ்வப்போது ஆல்பத்தில் அசத்தப் போவதாகவும் சொல்கிறார் லீனா.

லீனா முயற்சிகள் வீணாப் போகாம இருந்தா சரி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil