twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா மாதிரி எனக்கு யாருமே இல்லை... இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம்!

    |

    சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இயக்குநராக வலம் வந்து கொண்டுள்ளார்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் பலரும் இப்பொழுது ஆவலுடன் உள்ளனர்.

    இந்த நிலையில வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா இருப்பது போல எனக்கு யாருமே இல்லை என லோகேஷ் கனகராஜ் தனியார் யூடியூப் சேனலில் வருத்தத்துடன் பேசியுள்ளார்

    லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் மாதிரி RJB சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. ஆர்.ஜே.பாலாஜி கலக்கல் திட்டம்!லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் மாதிரி RJB சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. ஆர்.ஜே.பாலாஜி கலக்கல் திட்டம்!

    சிறந்த இயக்குநர்

    சிறந்த இயக்குநர்

    எந்த ஒரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணி புரியாமல் சிறு சிறு குடும்ப படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநரான ஆன லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் அவரை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்தது. லோகேஷ் கனகராஜ் இரண்டாவது படமாக இயக்கிய கைதி கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் வெளியானது. கைதி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது மேலும் இந்தப் படம் இப்போது இந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்திய அளவில் கிடைத்த மிகப்பெரிய ஆதரவை தொடர்ந்து இந்தப் படம் ரஷ்யா மற்றும் சீனா மொழிகளிலும் வெளியாகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

     வித்தியாசமான கதாபாத்திரத்தில்

    வித்தியாசமான கதாபாத்திரத்தில்

    புது புது இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் மாஸ்டர். விஜய்யின் திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து இருப்பார். விஜய், விஜய் சேதுபதி,சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், கௌரி கிஷான், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் என பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது

     இன்றும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக

    இன்றும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக

    மாநகரம், கைதி,மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக மாறிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி,பகத் பாசில், நரேன் என பலரது நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது 300 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் செய்து இன்றும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது

     வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா மாதிரி

    வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா மாதிரி

    அடுத்ததாக கைதி 2 மற்றும் விக்ரம் 3 உள்ளிட்டவைகளை இயக்க ஆயத்தமாகி வரும் லோகேஷ் கனகராஜ் வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா போல எனக்கு யாருமே இல்லை என ஃபீல் செய்து கூறியுள்ளார். வெற்றிமாறன் ரொம்ப நொந்துபோய் இருக்கும்போதோ அல்லது நினைத்தது வாழ்க்கையில் நடக்காமல் இருக்கும் போதும் யாரு கிட்ட போயி பேச என யோசிக்கும் போது அவருடைய குரு பாலுமகேந்திராவிடம் சென்று விடுவாராம் ஒரு இரண்டு வார்த்தை பேசி டீ போட்டுக் கொடுத்தால் சரியாகிவிடும் என வெற்றிமாறன் கூறியதைப் பார்த்து ச்ச நமக்கு இப்படி ஒரு ஆள் இல்லையே என பலமுறை வருத்தப்பட்டு உள்ளேன் என தனியாக யூடியூப் சேனல் நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் ஃபீல் செய்து நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

    English summary
    Like Balu Mahendra for Vetrimaran, No body is there with me says Lokesh Kanagaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X