twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கில் லிங்குச்சாமி

    By Staff
    |
    Click here for more images

    மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குநர் லிங்குச்சாமி இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாக்காரர்களுக்கு தெலுங்கில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. நம்ம ஊர் இயக்குநர்கள் பலர் தெலுங்கில் முழு நேர இயக்குநர்களாக பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளனர்.

    மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் திரையுலக வரலாற்றிலேயே பெரும் வசூல் சாதனை படைத்த ஸ்டாலின் படத்தை நம்ம ஊர் முருகதாஸ்தான் இயக்கி சாதனை படைத்தார்.

    இந்த நிலையில் லிங்குச்சாமியும் தெலுங்குக்குப் போகிறார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடிக்கவுள்ள 2வது படத்தை லிங்குச்சாமி இயக்கப் போகிறாராம்.

    சமீபத்தில் வெளியான சிறுத்த படம் மூலம் ராம் சரண் தேஜா ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார் தேஜா. இப்படத்தைத்தான் லிங்குச்சாமி இயக்கப் போகிறார்.

    தெலுங்கில் இந்தப் படத்தை முடித்து விட்டு இதே கதையை தமிழுக்கும் கொண்டு வரப் போகிறாராம் லிங்குச்சாமி. தமிழில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X