twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    80,90-ஸ் கிட்ஸை அலற வைத்த இந்த 4 பேய் படங்கள் ஒரு பார்வை...அன்னைக்கு பயம் இன்னைக்கு டிஜிட்டல் மயம்

    |

    சென்னை: இன்றைய டெக்னாலஜி, அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட காலத்தில், என்ன தான் பேய் படங்கள் வரிசை கட்டி நின்றாலும் கூட, 80, 90-ஸ் கிட்ஸை அலற வைத்த இந்த 4 பேய் படங்களை மறக்கவே முடியாது.

    படம் பார்த்துவிட்டு நிச்சயமாக இரண்டு நாட்கள் தூக்கம் வராலும், இரவில் தனியே வெளியே செல்ல முடியாமலும் தவித்திருப்பார்கள்.

    அந்த வகையில், இப்போது வரும் மார்டன் பேய் படங்களை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு பயமுறுத்திய அந்த 4 படங்கள் இதோ:

    என்னது 40 வயது கேங்ஸ்டரா.. விஜய் -லோகேஷ் படம் குறித்த அடுத்த அப்டேட்.. தொடர் புல்லரிப்பில் ரசிகர்கள்! என்னது 40 வயது கேங்ஸ்டரா.. விஜய் -லோகேஷ் படம் குறித்த அடுத்த அப்டேட்.. தொடர் புல்லரிப்பில் ரசிகர்கள்!

    யார்?'

    யார்?'

    அர்ஜூன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'யார்?'.

    வித்தியாசமான கதையம்சம் கொண்டஇப்படத்தில் அர்ஜூன் ஜோடியாக நளினி நடித்திருப்பார். சாத்தானின் குழந்தையாக ஜென்ம நட்சத்திரத்தில் பிறக்கும் ஒருவன் இந்த பூமியில் நிறைய சாத்தான்களை உருவாக்கும் நோக்கோடு பல பெண்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பான். அப்போது நல்ல சக்திக்கும், சாத்தானுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மொத்த கதையும். இதில் நடிகர் செந்தில் கதைக்கேற்றவாறு நகைச்சுவை செய்திருப்பார். புதிதாகத் தெருவில் மின் விளக்கு பொருத்தியிருப்பார்கள். செந்திலின் தந்தை (அவரே வயதானவராக நடித்திருப்பார்) அதில் மண்ணென்ணெய் தான் ஊற்றியிருப்பதாக நினைத்து அதை திருட முயற்சி செய்து மின்சாரம் தாக்கி இறந்து போவார். இந்த ஃபிளாஷ்பேக்கை நினைத்து மகன் செந்தில் மின்சாரம் என்றாலே அலறி அடித்து ஓடுவார். ஆனால் பேய் அவரை விடாமல் துரத்தி மின்சாரம் கொண்டு சாகடித்துவிடும். இப்படி ஒரு நகைச்சுவைக் காட்சி படத்தில் உண்டு.

    'மை டியர் லிசா '

    'மை டியர் லிசா '

    மை டியர் லிசா .. 1987 ஆம் ஆண்டு நிழல்கள் ரவி நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில்,ஆச்சி மனோரமா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். கதைப்படி, நிழல்கள் ரவி லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் போது லிசா என்ற பெண்ணைக் காதலிப்பார். ஆனால் லிசா ஒருநாள் மாயமாகிவிடுவார். அதன் பின்னர் அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் நிழல்கள் ரவி. ஆனால் அவர் தன் மனைவியோடு சந்தோஷமாக இருக்க முடியாதபடி தொடர்ச்சியாக பல மர்ம நிகழ்வுகள் வீட்டில் நடைபெறும். பிறகு ஒரு மந்திரவாதியிடம் செல்லும் போது தான், லிசாவை நிழல்கள் ரவியின் நண்பர்களே கற்பழித்து, கொலை செய்தது தெரியவரும். நிழல்கள் ரவியைப் பிரியமுடியாத லிசா ஆவியாய் அலைவாள். இது தான் படத்தின் கதை. காதல், கவர்ச்சி, திகில் அத்தனையும் கலந்த படம்.

    13-ம் நம்பர் வீடு

    13-ம் நம்பர் வீடு

    ஜெய் சங்கர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இந்த பேய் படம் அன்றைய காலக்கட்டத்தில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கதையம்சம் கொண்டது. கதைப்படி, 13-ம் எண் கொண்ட வீடு ஒன்றில் சகோதரர்கள் இருவர் குடும்பத்தோடு குடிபுகுகிறார்கள். முதலில் அவ்வீட்டில் வயதான ஆண் இறக்கிறார். அதன் பின்னர் அண்ணனும் மர்மமான முறையில் இறக்க, அடுத்தடுத்து வீட்டில் திகிலூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. பின்னர் வீட்டில் உள்ள புத்தக அலமாரிக்குள் ஒரு மர்ம அறை இருப்பதை கண்டுபிடிக்கின்றார் ஜெய்சங்கர். பிளாஷ்பேக்கில் தான் அக்குடும்பத்தின் முன்னோர் ஒருவர் ஒரு பெண்ணின் சாவுக்கு காரணமாக இருந்தது தெரியவருகின்றது. இறந்த அப்பெண் அந்த வம்சத்து ஆண்களை எல்லாம் அழிக்கின்றார். இது தான் கதை. ஆனால் எடுத்த விதத்தில் இப்போது பார்த்தாலும் போர்வையை இறுகப் போர்த்திப் படுக்க வைத்துவிடுவார்கள்.

    உருவம்'

    உருவம்'

    1991 ஆம் ஆண்டு 'மைக்' மோகன் நடிப்பில் வெளிவந்த படம் 'உருவம்'. அந்த காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக காதல் படங்களில் நடித்து வந்த மோகன்,சற்று வித்தியாசமாக இப்படத்தில் பேய் பிடித்தவராக நடித்திருந்தார். கூறான பற்களுடன் பேயாகத் தோன்றும் காட்சிகளில் மோகன் உண்மையில் அந்தக்கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். கதைப்படி, தனது தந்தை வழிச் சொத்தான ஒரு வீட்டின் மீது தொடரப்படும் வழக்கில் மோகனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிடும். எனவே மோகனும்,அவரது தங்கை பல்லவியும் தங்கள் குடும்பத்தினருடன் அந்த வீட்டில் குடியேறுவார்கள்.ஆனால் எதிரிகள், மாந்திரீகர்களை வைத்து அந்த வீட்டில் சில அமானுஷ்ய சக்திகளை ஏவி
    விடுவார்கள். அந்த சக்திகள் மோகனின் மீது ஏறிக்கொண்டு அந்த குடும்பத்தையே ஆட்டிப்படைக்கும். 'அவன் இவன்' யுவர் ஐனஸ் ஜி.எம்.குமார் இப்படத்தின் இயக்குநர்.

    ஜெகன் மோஹினி

    ஜெகன் மோஹினி

    மிகவும் குறைவான செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் இளைராஜா பிண்ணனி இசையமைத்திருப்பார். 90 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்து ரசிகர்களை பயமுறுத்திய பேய் படங்களில் உருவமும் ஒன்று என்பது மறுக்கமுடியாத ஒன்று.80,90-ஸ் கிட்சை அலற வைத்த இந்த 4 பேய் படங்கள் தவிர இன்னமும் நிறைய படங்கள் உள்ளன . குறிப்பாக ஜெகன் மோஹினி படம் பற்றி பேசுவதற்கு நிறைவே இருக்கிறது. இன்று நிறைய பேய் படங்கள், நவீன தொழில் நுட்பம், ஸ்பெஷல் சவுண்ட், என்று டிஜிட்டல் உலகத்தில் பல விதமாக எடுக்கப்படுகிறது. ஆனால் இந்த படங்கள் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று.

    English summary
    List of 4 Ghost Movies Which Really Feared 80’s and 90’s Kids
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X