பிரபல நடிகைகளை திருமணம் செய்துகொண்ட பின் ஃபீல்ட் அவுட் ஆன இயக்குநர்கள் லிஸ்ட்!

சென்னை: திரையுலகில் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன நடிகைகள் உள்ளனர்.

திரையுலகை கடந்தும் வெற்றிகரமான தம்பதிகளாக இவர்கள் வலம் வருவதை பார்க்க முடிகிறது.

ஆனால், சில பிரபலங்கள் திருமணத்திற்குப் பின்னர் ஃபீல்ட் அவுட் ஆகிவிடுவது வழக்கம்.

அதன்படி, பிரபல நடிகைகளை திருமணம் செய்துகொண்ட பின்னர் ஃபீட் அவுட் ஆன இயக்குநர்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

 ஆர்கே செல்வமணி - ரோஜா

ஆர்கே செல்வமணி - ரோஜா

1990ம் ஆண்டு வெளியான புலன் விசாரணை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்கே செல்வமணி. ரஜினி, கமல் போன்ற சூப்பர் ஸ்டார்கள் தங்களது 100வது படங்களில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறியது உண்டு. ஆனால், விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரனை ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக்கி அமர்க்களப்படுத்தினார். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என விஜயகாந்தின் கேரியரையே உச்சம் கொண்டு சென்ற ஆர்கே செல்வமணி, செம்பருத்தி படத்தில் நடிகை ரோஜாவை நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

 ஃபீல்ட் அவுட் ஆன பரிதாபம்

ஃபீல்ட் அவுட் ஆன பரிதாபம்

அப்போது முதல் இருவரும் காதலித்து வந்தாலும், இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 2002ல் தான் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், ஆர்கே செல்வமணியின் கேரியர் செம்பருத்தி படத்திற்குப் பின்னர், அதாவது ரோஜாவை காதலிக்கத் தொடங்கியதுமே ஆட்டம் கண்டது. அதன் பின்னர் வெளியான ராஜமுத்திரை, மக்கள் ஆட்சி, ராஜஸ்தான் என எந்தப் படமும் ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ரோஜா அரசியலுக்கும் சென்று தெலங்கானாவில் அமைச்சராகிவிட்டார்.

 சுந்தர் சி - குஷ்பூ

சுந்தர் சி - குஷ்பூ

ஆர்கே செல்வமணியை அடுத்து இந்த வரிசையில் சுந்தர் சி-க்கும் முக்கியமான இடம் உள்ளது. 1995ல் முறை மாமன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுந்தர் சி. ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ நடிப்பில் காமெடியில் கலக்கியது இந்தப் படம். அப்போது முதலே சுந்தர் சி - குஷ்பூ இடையே காதல் மலர்ந்துவிட்டது. அதேநேரம் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார் சுந்தர் சி. 2000ம் ஆண்டு குஷ்பூவுடன் திருமணம் ஆன பிறகு அவர் இயக்கிய படங்கள் எதுவும் எடுபடவே இல்லை. வின்னர், கிரி, கலகலப்பு திரைப்படங்களில் காமெடி மட்டுமே ஹிட்டானது தவிர உள்ளத்தை அள்ளித்தா போல் மாஸ் காட்ட முடியவில்லை. இப்போதும் சுந்தர் சி படங்கள் இயக்கினாலும், பழைய பன்னீர் செல்வமாக திரும்ப முடியாமல் திணறிதான் வருகிறார் சுந்தர் சி.

 ராஜகுமாரன் - தேவயானி

ராஜகுமாரன் - தேவயானி

1999ல் நீ வருவாய் என திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜகுமாரன். அஜித், பார்த்திபன், தேவயானி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் உருவான போதே ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் இடையே காதல் மலர, இறுதியாக 2001ம் ஆண்டு திருமணமும் நடந்தது. அதோடு ராஜகுமாரனின் கதையும் முடிந்தது. இயக்குநர் விக்ரமனைப் போல வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ராஜகுமாரன் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். 2001ம் ஆண்டு அவரது இயக்கத்தில் ரிலீஸான விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில், விக்ரம், தேவயானி நடித்தும் புஷ்வானமாக தான் போனது.

 லக்கி ஜோடி விக்கி - நயன்

லக்கி ஜோடி விக்கி - நயன்

ஆர்கே செல்வமணி - ரோஜா, சுந்தர் சி - குஷ்பூ, ராஜகுமாரன் - தேவயானி எல்லாம் 90ஸ் கிட்ஸ் ஜோடி என்றால், 2கே கிட்ஸ்களுக்காக விக்கியும் - நயனும் இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளனர். விக்கியின் முதல் படமான போடா போடி வெளியானபோதே கிட்டத்தட்ட அவர் ஃபார்மில் இல்லாமல் தான் இருந்தார். ஆனால், நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் இணைந்து கை கொடுத்து தூக்கிவிட்டனர். கடைசியாக விக்கியே நயனின் காதல் நாயகனாக கரம்பிடித்தார்.

 கைவிட்டு போன ஏகே 62

கைவிட்டு போன ஏகே 62

நயனின் கையை விக்கி பிடிக்க, லைகாவோ ஏகே 62வில் இருந்து விக்கியை கழட்டி விட்டது. அஜித்தின் படத்தை இயக்கி லைம் லைட்டில் வந்துவிடலாம் என நினைத்த விக்னேஷ் சிவன், தற்போது வெறித்தனமாக கம்பேக் கொடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டாராம். தானா சேர்ந்தக் கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களும் விக்னேஷுக்கு பெரிதாக ரீச் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்கே செல்வமணி, சுந்தர் சி, ராஜகுமாரன் போன்று இல்லாமல் விக்னேஷ் சிவனாவது மீண்டும் டாப் கியரில் வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X