twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜா, ரஹ்மான், யுவன், அனிருத் இசையில் விஜய் பாடிய பாடல்கள்

    |

    சென்னை: தளபதி விஜய் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து நேற்று தளபதி 66 படத்தின் தலைப்பு "வாரிசு" என்று அறிவிக்கப்பட்டு அதனுடைய ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

    அவருடைய ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளை மட்டுமின்றி வாரிசு படத்தையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். திறைத்துறையைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து இணையத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. தோழா திரைப்பட இயக்குநர் வம்சி இந்தப் படத்தை இயக்குகிறார். தான் இதுவரை கேட்ட, நடித்த திரைப்படங்களிலேயே இது முற்றிலும் வித்யாசமான கதையம்சமுள்ள திரைப்படம் என்று விஜய் அறிவித்திருந்தார்.

    வேணாம்..விட்டுடு.. ப்ளூ சட்டை மாறனை வெச்சி செஞ்ச ஆர்.ஜே.பாலாஜி!வேணாம்..விட்டுடு.. ப்ளூ சட்டை மாறனை வெச்சி செஞ்ச ஆர்.ஜே.பாலாஜி!

    விஜய்யின் திரைப்பயணம்

    விஜய்யின் திரைப்பயணம்

    விஜய் நடிக்க ஆரம்பித்த முதல் படத்திலிருந்து இப்போது வரை அவருடைய வளர்ச்சி அசுரத்தனமாக உள்ளது. இத்தனை ஆண்டு கால திரைப் பயணத்தில், பதினைந்திற்கும் மேற்பட்ட இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அட்லீ, முருகதாஸ், பிரபு தேவா, தரணி, பேரரசு உள்ளிட்ட பத்து இயக்குநர்களுடன் ஒன்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

    நடனப் புயல் விஜய்

    நடனப் புயல் விஜய்

    விஜய் என்று சொன்னாலே அவருடைய நடனம்தான் ஞாயபாத்திற்கு வரும். எண்ணற்ற ரசிகர்களின் அபிமானத்தை அவரது நடனத்தின் வாயிலாகவே பெற்றுள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. ரிகர்சல் எதுவும் இல்லாமல் செட்டில் ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துவிட்டு அதனை அப்படியே ஆடிக் காட்டுவதாலேயே, பிரபு தேவா, லாரன்ஸ் என்று டான்ஸ் மாஸ்டர்கள் பலரும் இவருக்கு ஆர்வமாக கோரியோகிராஃப் செய்வார்கள்.

    பாடகர் விஜய்

    பாடகர் விஜய்

    நடனத்திற்கு இணையாக பாடல்களும் பாடக் கூடியவர் விஜய் என்று பலருக்கும் தெரியும். ஆனால் இதுவரை இளையராஜா, AR.ரகுமான், தேவா, யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத், சந்தோஷ் நாராயணன், தேவி ஶ்ரீ பிசாத், உள்ளிட்ட பதினேழு இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடியுள்ளார் என்பதும், தனது படங்களுக்கு மட்டுமல்லாமல் சூர்யா, அருண் விஜய், விக்னேஷ் போன்ற பிற நடிகர்களுக்கும் இவர் பாடியுள்ளார் என்பதும் பலருக்கும் தெரியாது.

    விஜய்யின் குட்டிக்கதை

    சமீப காலமாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் குட்டிக் கதை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார் விஜய். அப்படி மாஸ்டர் திரைப்படத்தின்போது அவர் கூறிய குட்டிக் கதையை அனிமேஷன் கதையாக வெளியிட்டுள்ளார்கள் அவரது ரசிகர்கள். அது மட்டுமின்றி, விஜய்யின் 48-வது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வைக்கக் கூடிய காமன் டிபியை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்

    தளபதி / விஜய் 67

    தளபதி / விஜய் 67

    வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்பட வெற்றிகளைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கப் போகும் படம் என்பதால், இப்போதே அந்தப் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    English summary
    List of Songs Sung by Vijay in Raja, Rahman , Yuvan and Anirush Music
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X