இந்த லாக்டவுன் நேரத்துல.. வீட்டிலேயே சூப்பர் சிங்கராகும் குழந்தைகள்.. குட்டீஸ் ஸ்பெஷல் பார்ட் 2!
சென்னை: ஆண்டு விடுமுறை விட்டாலே குழந்தைகளின் அட்டகாசங்கள் வீட்டில் தாங்க முடியாது.
இந்த கொரோனா பரவல் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருக்கும் குழந்தைகள், சேட்டைகள் செய்தாலும், படிப்படியாக அவர்களும், தங்களை சீர்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டனர்.

இத்தனை நாட்கள் கிடைத்துள்ள விடுமுறைகளால், பல வீடுகளில் தினமும் பாட்டு போட்டி, நடனப் போட்டிகள் என குழந்தைகளின் தனித் திறமைகளை பெற்றோர்கள் வளர்க்கவும், பார்க்கவும் ஒரு அரிய வாய்ப்பாகவே இந்த லாக்டவுனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்ம தமிழ் ஃபிலிமி பீட்டில் வந்துடுச்சு குட்டீஸ் ஸ்பெஷல் பார்ட் 2. முன்னதாக லாக்டவுனில் குழந்தைகள் பார்க்க வேண்டிய படங்கள் குறித்து பேசிய அழகான இந்த குழந்தைகள், தற்போது தங்களுக்கு பிடித்த பாடல்களை பாடியுள்ளனர்.
குழந்தைகளின் ஆல் டைம் ஃபேவரைட் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நடிகர் விஜய் தான். மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை இரு குழந்தைகளும் அழகாக பாடியுள்ளனர்.
அடுத்ததாக, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் எங்க அண்ணன் பாடலையும் பாடி அசத்தினர். இந்த பாடல், பல குழந்தைகளுக்கும் ஃபேவரைட்டான ஒன்று.
மூன்றாவது பாடலாக, குழந்தைகளை வீடுகளில் செம டான்ஸ் போட வைத்த ரவுடி பேபி பாடலை இருவரும் பாடுகின்றனர். கடைசியாக, தந்தை பாசத்தை வெளிக்காட்டும் தல அஜித்தின் கண்ணான கண்ணே பாடலோடு இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கின்றனர்.
இந்த குழந்தைகளின் மழலை குரலில் வெளியான பாடல்களின் வீடியோவை பார்த்து ரசியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு இதில் பிடித்த பாடலை, அவர்களை பாட சொல்லி அதையும் கேட்டு ரசியுங்கள்.


Click it and Unblock the Notifications











