ஹாய் குட்டீஸ்.. இந்த லாக் டவுனில் நீங்க பார்த்து என்ஜாய் பண்ண இந்த 3 படங்களை பார்க்கலாம்!
சென்னை: இந்த லாக் டவுன் நேரத்தில் பெரியவர்களுக்கு மட்டும் நல்ல நல்ல படங்களை பரிந்துரைத்தால் போதுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், இப்படியொரு அருமையான வீடியோ உருவாகி இருக்கிறது.
அதுவும், குட்டிஸே தொகுப்பாளராக மாறி, தங்களை போன்ற குட்டி சுட்டீஸ்க்கு மிகவும் பொருத்தமான சூப்பர் படங்களை சூஸ் செய்து கொடுத்துள்ளனர்.

விடுமுறை விட்டாலும், பாட்டி வீட்டுக்கு போக முடியாமல், எம்.ஜி.எம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லாந்து என்று கேளிக்கை பூங்காக்களுக்கு போக முடியாமல், தெருவில் இறங்கி விளையாடினாலும், ட்ரோன் வந்து கண்காணிக்கும் நிலை இருப்பதால், வீட்டிலேயே குழந்தைகள் முடங்கிக் கிடக்கின்றனர்.
டிவியில் பெரியவர்களுக்கான படங்களே அதிகம் ஒளிபரப்பாவதால், கடுப்பில் இருக்கும் குழந்தைகள், இந்த மூன்று படங்களை இந்த லாக் டவுனில் பெற்றோர்களிடம் சொல்லி போட்டுப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குட்டி குழந்தைகளுடன் அட்டகாசம் செய்யும் ராஜா சின்ன ரோஜா மற்றும், பாப்பா பாடும் பாட்டு என்ற அருமையான பாடல் இடம் பெற்ற துர்கா போன்ற படங்களை இந்த லாக் டவுன் நேரத்தில் சுட்டி குழந்தைகளுக்கு இந்த இரண்டு க்யூட் குட்டீஸ் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த வாரம் இந்த படத்தை பார்த்து முடியுங்க, அடுத்த வாரம் இன்னும் சில சூப்பரான பட பட்டியலுடன் உங்களை இவர்கள் சந்திப்பார்கள்.


Click it and Unblock the Notifications











