லோகேஷ் ,நெல்சன், விக்னேஷ் தமிழ் சினிமாவை ரூல் பண்றாங்க... வெங்கட் பிரபு!

சென்னை: தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களில் மிக முக்கியமானவர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் மற்றும் நெல்சன்

வித்தியாசமான படைப்புகளை கொடுத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ள இவர்கள் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு லோகேஷ் கனகராஜ்,நெல்சன்,விக்னேஷ் சிவன் ஆகியோர் தமிழ் இண்டஸ்ட்ரிய ரூல் பண்ணிட்டு இருக்காங்க என தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பெருமிதமாக கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புது புது இயக்குநர்கள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கிறார்கள் அவ்வாறு அறிமுகமாகும் இயக்குநர்கள் வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றனர்.மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதைத் தொடர்ந்து இயக்கிய அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. இந்த நிலையில் தனது கலையுலக குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலைக் குவித்து வருகிறது

நெல்சன்

நெல்சன்

நயன்தாரா லீட் ரோலில் நடித்த கோலமாவு கோகிலா என்ற வித்தியாசமான படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை இயக்கினார். அவை மிகப்பெரிய வெற்றிபெற்றது. கடத்தல் மற்றும் டார்க் காமெடியை மையமாக வைத்து புதுவிதமான ஸ்டைலில் நெல்சன் இயக்கி வந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றன இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும் கமர்சியல் ரீதியாக வசூலை அள்ளியுள்ளது அதை தொடந்து இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் காத்துவாக்குல 2 காதல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

தமிழ் சினிமாவை ரூல் பண்ணிட்டு இருக்காங்க

தமிழ் சினிமாவை ரூல் பண்ணிட்டு இருக்காங்க

இவ்வாறு தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களாக கலக்கி கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ்,நெல்சன்,விக்னேஷ் சிவன் ஆகியோர் தான் தமிழ் சினிமாவை ரூல் பண்ணிட்டு இருக்காங்க என இயக்குநர் வெங்கட்பிரபு தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் பேசியுள்ளார். மேலும் இவர்கள் இடத்தில் இருக்கும் அந்நியோன்யம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. ஜாலியா ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சிகிட்டு ஈகோ இல்லாம இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என வெங்கட்பிரபு புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X