ஹார்ட்டீனோடு அறிமுகமாகும் லாஸ்லியா.. ஸ்பின் போடும் ஹர்பஜன்.. தெறிக்கும் பிரண்ட்ஷிப் குட்டி டீசர்!

சென்னை: சர்வதேச நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, பிரண்ட்ஷிப் படத்தின் அட்டகாசமான டீசர் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி இருக்கிறது.

இரட்டை இயக்குநர்களான ஷாம் சூர்யா மற்றும் ஜான் பால்ராஜ் இணைந்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக கால் பதிக்கிறார். பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

மிரட்டல் லுக்கில் அர்ஜுன்

மிரட்டல் லுக்கில் அர்ஜுன்

ஜாலியான கல்லூரி கதையாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் குட்டி டீசரின், முதல் காட்சியிலேயே ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மிரட்டல் லுக்கில் என்ட்ரி கொடுத்து, இது ஒரு த்ரில்லர் படமா? என்கிற கேள்விக்குறியை கிளப்பி இருக்கிறது. கல்லூரி நட்பை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

பிரண்ட்ஷிப் டே பரிசு

பிரண்ட்ஷிப் என்ற பெயருடன் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் க்ளிம்ஸ் எனப்படும் குட்டி டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. சர்வதேச நண்பர்கள் தினத்தை முன்னிட்ட், பிரண்ட்ஷிப் படக்குழு இதனை வெளியிட்டு நண்பர்கள் தினத்தை மேலும், சிறப்பித்துள்ளது. டீசர் அருமையாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிகின்றன.

ஸ்பின் போடும் ஹர்பஜன்

ஸ்பின் போடும் ஹர்பஜன்

தமிழ்நாட்டு கல்லூரியில் படிக்க வடமாநிலத்தில் இருந்த வரும் இளைஞராகவே இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். உலகளவில் பிரபல சுழற்பந்து வீச்சாளரான இவர், இந்த குட்டி டீசரில், பந்தை வைத்து ஸ்பின் செய்யும் காட்சிகளும் இடம்பிடித்துள்ளன. மாணவர்களுடன் எதையோ சேர்ந்து சாதித்தது போன்ற காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.

ஹார்ட்டீனுடன் லாஸ்லியா

ஹார்ட்டீனுடன் லாஸ்லியா

இலங்கை செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கென தனி ஆர்மியையே உருவாக்கிக் கொண்டார். பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர், இரண்டு தமிழ் சினிமாவில் கமீட் ஆகி உள்ள இவர், நடிப்பில் உருவாகி உள்ள பிரண்ட்ஷிப் படத்தின் குட்டி டீசரில் கைகளில் ஹார்ட்டீன் சிம்பிள் காட்டியபடி அறிமுகமாகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X