சூர்யாவுக்கு குவிந்த லவ் லெட்டர்ஸ்... சீக்ரெட் சொன்ன சூர்யாவின் தங்கை பிருந்தா!
சென்னை: மிரட்டலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் நடிப்பு நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா
சூர்யாவின் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அங்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சூர்யா கொண்டுள்ளார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சூர்யாவின் தங்கை பிருந்தா சூர்யாவுக்கு குவிந்த லவ் லெட்டர்ஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சமூகத்திற்கு முக்கிய கருத்துக்களை
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கமர்ஷியல் படங்களாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு முக்கிய கருத்துக்களை சொல்லும் படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக எதிர்த்துப் போராடும் நேர்மையான வழக்கறிஞராக சூர்யா கலக்கியிருப்பார். சூர்யா அதுவரை பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஜெய்பீமில் சூர்யா நடிப்பு ரசிகர்களை மேலும் ஊக்குவித்தது.

தெலுங்கில் வசூலை வாரி குவித்துள்ளது
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கல்விக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்து வரும் சூர்யாவுக்கு தமிழில் எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே அளவிற்கு மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக தெலுங்கில் இவரது திரைப்படங்கள் பல பிளாக்பஸ்டர் வெற்றி வசூலை வாரி குவித்துள்ளது

ஜல்லிக்கட்டு விளையாட்டை
அசுரன் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் வாடிவாசல் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. அடுத்ததாக இயக்குநர் பாலா இயக்கத்தில் சொந்த தயாரிப்பில் சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வருகிறார்

அவமானங்களை ஏணிப்படிகளாக மாற்றி
மிகப் பெரிய திரை குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்து இருந்தாலும் தனது விடா முயற்சியின் மூலமும் கடின உழைப்பின் மூலமும் இப்பொழுது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் சூர்யா ஆரம்ப காலகட்டங்களில் பல அவமானங்களை சந்தித்தவர். அந்த அவமானங்களை எல்லாம் ஏணிப்படிகளாக மாற்றி இப்பொழுது உயரத்தில் உள்ள சூர்யா குறித்து அவரது தங்கை பிருந்தா சிவக்குமார் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்

அண்ணாவோட ஃபேன்ஸ் லெட்டர்ஸ்
சூர்யாவின் ஃபர்ஸ்ட் படம் நேருக்கு நேர் வெளியாகும்போது நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அண்ணாவோட ஃபேன்ஸ் வீட்டுக்கு நிறைய லெட்டர்ஸ் எழுதுவாங்க. அதிகமாக மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தான் லெட்டர்ஸ், மெயில் வரும். போஸ்ட்மேன் கொண்டு வந்து வீட்டில் கொட்டுவார்.

அதிகமா லவ் லெட்டர்ஸ் வரும்
அதில் சூர்யாவுக்கு அதிக அளவில் லவ் லெட்டர்ஸ் வரும், அதுல எனக்கும் லவ் லெட்டர்ஸ் வந்திருக்கு. அதில் சிலர் நான் உனக்கு நல்ல அண்ணியா இருப்பேன், உன்ன நான் நல்லா பாத்துக்குவேன். உங்க அண்ணா கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லு என கூறி மாடர்ன் டிரஸ், சேலை என வித்தியாசமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்புவார்கள். என சூர்யாவுக்கு முதல் படத்திலேயே வந்து குவிந்த லவ் லெட்டர்ஸ் குறித்து அவரது தங்கை பிருந்தா சிவக்குமார் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











