தமிழ்ப் புத்தாண்டுக்கு வருமா மாற்றான்?

சூர்யா - காஜல் அகர்வால் நடித்து வரும் படம் மாற்றான். கே வி ஆனந்த் இயக்குகிறார். ஏற்கெனவே சூர்யா நடித்த அயன் என்ற வெற்றிப் படத்தைத் தந்தவர் ஆனந்த்.
அவர் ஜீவாவை வைத்து சமீபத்தில் இயக்கிய கோ படமும் பெரும் வெற்றி பெற்றது. எனவே இப்போது மாற்றானுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.
சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தப் படம், தமிழ் புத்தாண்டில் வருவதாக இருந்தது. ஆனால் இறுதிகட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரிலீஸ் ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் இறுதியில்தான் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என்பதால், இந்தப் படத்தை ஏப்ரல் 25-ம் தேதிக்குப் பிறகு அல்லது மே முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படமும் பெரிய விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications