»   »  டைரக்டருடன் மோதிய மாதவன்!

டைரக்டருடன் மோதிய மாதவன்!

Subscribe to Oneindia Tamil

யாரோ ஒருவன் படத்தின் சூட்டிங்கில் இயக்குனர் சீமானுக்கும் நடிகர் மாதனுக்கும் இடையே முட்டிக் கொண்டுவிட்டதாம்.

தமிழில் பழயை பாயில் சுருண்டு கிடந்த மாதவனின் மார்க்கெட்டை தம்பி படத்தின் மூலம் தூக்கி நிறுத்தியவர் சீமான். அதிலிருந்தே சீமானை தனதுஅண்ணன் என்று தான் எல்லோரிடமும் அன்பாகக் கூறி வந்தார் மேடி.

இப்போது அந்த அண்ணன் தம்பிக்குள் மோதல் வெடித்துள்ளது.

சீமானின் புதிய படமான யாரோ ஒருவனில் 8 வயது குழந்தையின் தந்தையாக, நடுத்தர வயதுக்காரராக, மிக மெச்சூர்ட் கேரக்டரில் நடித்துவருகிறார் மாதவன். மாராட்டியில் வெளியான போரிவெலி பாஸ்ட் என்ற படத்தின் ரீ-மேக் தான் இது.

இதில் மாதவனுக்கு ஜோடியாக நடிப்பது நம்ம ரசிகா (சங்கீதா) தான். மாதவனுக்கு ஜோடி என்பதால் தான் அக்கா மாதிரி தெரிந்துவிடக் கூடாதுஎன்று உடம்பை கொஞ்சம் போல ஸ்லிம்மாக்கி இருக்கிறாராம் ரசிகா.

பயில்வான் ரங்கநாதனுக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம்.

சீமான், வெறுமனே ஒரு இயக்குனர் மாத்திரமல்ல. சிறந்த தமிழ் ஆர்வலர், தீவிரமான பெரியார் பக்தர், திராவிட பாரம்பரியத்தில் ஊறித் திளைத்தமனிதர்.

இதனால் இவரது படத்தில் வசனங்கள் எப்போதும் கூர் பிடித்து நிற்கும். இந் நிலையில் மாதவன் சில வசனங்களை திருத்தச் சொன்னதாகத் தெரிகிறது.அதை சீமான் ஏற்கவில்லை. இதையடுத்து ஸ்ரீரங்கம் அருகே செட் போட்டு சூட்டிங் நடந்தது.

மாதவனுக்கு வசனங்களை சொல்லிவிட்டு கேமரா ஆங்கிளையும் சொல்லி சூட் செய்யச் சொல்லவிட்டு கொஞ்சம் வேலையாக வெளியேபோயிருக்கிறார் சீமான்.

ஆனால், அவர் தந்த வசனத்தை விட்டு விட்டு தானே எழுதிய வசனத்தை மாதவனே பேசி நடிக்க, சீமானுக்கு விவரம் போனது.

இதைக் கேள்விப்பட்டு கோபத்துடன் வந்த திரும்பி வந்த சீமான், மாதவனிடம் கேட்க. இதோ நான் எழுதின வசனம் என்று பேப்பர் கத்தையைகாட்டியுள்ளார். அதை அப்படியே வாங்கி விசிறியடித்த சீமான், நான் எழுதியதை திருத்த நீங்க யார் என்று பாய்ந்துள்ளார்.

நீங்க எழுதினதெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு என்று மாதவன் பதில் சொல்ல கடுப்பான சீமான் சேரை தூக்கி வீசியபடி, நான் எழுதின வசனத்துலஇருக்குற சில திராவிட தொனியிலான வசனங்கள் உங்களுக்கு பிடிக்கலை. அதனால் தான் அதை மாத்தியிருக்கீங்க என்று சொல்லி சூட்டிங்கைநிறுத்தச் சொல்லிவிட்டாராம்.

இதனால் படம் அப்படியே தொக்கி நிற்கிறது. நல்ல இயக்குனரான சீமான், நல்ல நடிகரான மாதவனும் கொஞ்சம் இறங்கி வந்தால் நல்ல படம் வரஒரு வாய்ப்பு அமையும்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil