twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்க ஏரியா உள்ள வராதே.. சென்னை 28 முதல் சார்பட்டா பரம்பரை வரை.. மெட்ராஸ் 382 சினிமா ஸ்பெஷல்!

    |

    சென்னை: மதராசப்பட்டினம், மெட்ராஸ், சென்னை, சிங்கார சென்னை என ஏகப்பட்ட சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்டு வரும் நம்ம ஊர் உருவாகி 382 ஆண்டுகள் ஆகின்றன.

    மெட்ராஸ் 382 தினம் முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    விவாகரத்தா...யாரு நாங்களா...வதந்திகளுக்கு சமந்தா கொடுத்த ஸ்மார்ட் பதில் விவாகரத்தா...யாரு நாங்களா...வதந்திகளுக்கு சமந்தா கொடுத்த ஸ்மார்ட் பதில்

    சென்னையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றிய வடசென்னையை மையமாக வைத்து ஏகப்பட்ட படங்களும் பாடல்களும் தமிழ் சினிமாவில் உருவாகி உள்ளன.

    கோடம்பாக்கம் ஏரியா

    கோடம்பாக்கம் ஏரியா

    தென்னிந்திய சினிமா உருவாக காரணமாக இருந்ததே சென்னையில் உள்ள கோடம்பாக்கம் தான். ஏவிஎம் ஸ்டூடியோ, வாஹினி ஸ்டூடியோ, ஜெமினி ஸ்டூடியோவில் தான் தமிழ் சினிமாவுடன் இணைந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பத்தில் நடைபெற்றன. ரசிகர்கள் மத்தியில் சென்னை என்று சொன்னதுமே நினைவுக்கு வரும் சில முக்கிய படங்கள் குறித்து இங்கே காண்போம்..

    சென்னை 28

    சென்னை 28

    இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் தான் சென்னை 600028. சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா நகரின் பின்கோடையே படத்திற்கு டைட்டிலாக வைத்து, சென்னை இளைஞர்கள் விளையாடும் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டும் அவர்களை சுற்றி நடக்கும் லோக்கல் ரவுடிசத்தையும் படமாக பண்ணி அசத்தியிருப்பார் வெங்கட் பிரபு. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அத்தனை பாடல்களுமே இன்றும் இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட்டான பாடல்கள் தான். ஜெய், பிரேம்ஜி, சிவா, விஜய் வசந்த், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஸ் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி மூலம் இதில் நடித்த ஏகப்பட்ட இளம் நடிகர்கள் பல பட வாய்ப்புகளும் குவிந்தன.

    மதராசப்பட்டினம்

    மதராசப்பட்டினம்

    சுதந்திரத்திற்கு முன்பு சென்னை எப்படி இருந்தது என்பதை காட்டும் வகையில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அதுவரை இப்படியொரு பீரியட் டிராமா படம் தமிழில் வெளியாகாத அளவுக்கு மிகவும் நேர்த்தியான தொழில்நுட்பத்துடன் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை எமி ஜாக்சனை வைத்து மதராசப்பட்டினத்தை இயக்கி இருந்தார் ஏ.எல். விஜய். சென்னை சென்ட்ரல் முன்பாக டிராம் ஓடிய காலத்தை எல்லாம் அழகான செட் போட்டு அப்படியே கண் முன்னே காட்டியிருப்பார்கள். தற்போது ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை எப்படி கொண்டாடப்படுகிறதோ அதே அளவுக்கு கொண்டாடப்பட வேண்டிய படம் தான் மதராசப்பட்டினமும்.

    மெரினா

    மெரினா

    "வணக்கம் வாழவைக்கும் சென்னை" என சிவகார்த்திகேயன், ஓவியா நடிப்பில் வெளியான மெரினா படத்திற்கு ஏகப்பட்ட நடிகர்கள் புரமோஷன் வீடியோவில் நடித்திருந்தனர். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான இந்த படம் சென்னையின் மிகவும் முக்கியமான அடையாளமான மெரினா கடற்கரையை சுற்றி உருவாக்கப்பட்ட படம். மெரினா கடற்கரையில் வாழும் சிறுவர்களின் கதையை சுவாரஸ்யங்கள் கலந்து எடுத்துக் காட்டியிருப்பார் இயக்குநர் பாண்டிராஜ்.

    வணக்கம் சென்னை

    வணக்கம் சென்னை

    உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குநராக அறிமுகமான படம் வணக்கம் சென்னை. மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் சந்தானத்தின் அட்டகாச காமெடியில் கடந்த 2013ம் ஆண்டு உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில் உருவான சென்னை vs மும்பை பாடலில் சென்னையின் பெருமைகள் அனைத்தையும் பாடி அசத்தி இருப்பார் அனிருத்.

    மெட்ராஸ்

    மெட்ராஸ்

    அட்டகத்தி படத்தை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, கேத்தரின் தெரசா நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. ஹவுசிங் போர்டில் வாழும் வடசென்னை மக்களின் வாழ்க்கையும் அங்கே நிகழும் சுவர் அரசியலையும் இளைஞர்கள் அந்த அரசியல் சாக்கடையில் சிக்கி எப்படி சீரழிகின்றனர் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்து அசத்தி இருப்பார் இயக்குநர் பா. ரஞ்சித். அந்த படத்தில் இடம்பெற்ற சந்தோஷ் நாராயணனின் எங்க ஊரு மெட்ராஸ்.. அதற்கு நாங்க தானே அட்ரஸ் பாடல் எப்போதுமே தனித்துவம் வாய்ந்த ஒன்று தான்.

    வடசென்னை

    வடசென்னை

    புதுப்பேட்டை, பொல்லாதவன், திருடா திருடி என ஏகப்பட்ட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் நடித்து வந்த நடிகர் தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் உடன் இணைந்து உருவாக்கிய படம் தான் வடசென்னை. கடந்த 2018ம் ஆண்டு வெளியான இந்த படம் வடசென்னை மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் ரவுடிசத்தையும் பேசியது. ஆனால், வடசென்னை மக்களின் வாழ்வாதாரம் மேலோங்கி விட்டது என்றும் இன்னமும் அவர்களை ரவுடிகளாகவே ஏன் சித்தரிக்க வேண்டும் என கிளம்பிய எதிர்ப்பு காரணமாக இயக்குநர் வெற்றிமாறன் வடசென்னை மக்களிடம் மன்னிப்பும் கோரியிருந்தார். வடசென்னை மூன்று பாகங்களாக உருவாக இருந்த நிலையில், அந்த முயற்சியும் அதன் காரணமாகவே கைவிடப்பட்டது.

    Recommended Video

    Dhanush -யை வெச்சி செய்த நீதிபதி 2 நாளில் 30 லட்சம் கட்டுங்க! | Thalapathy Vijay, Rolls Royce
    சார்பட்டா பரம்பரை

    சார்பட்டா பரம்பரை

    மின்ட் ஏரியாவில் உள்ள மணிக்கூண்டு, நேரு ஸ்டேடியம் என 80களில் இருந்த சென்னைக்கு மீண்டும் ரசிகர்களை டைம் மெஷினில் ஏற்றிக் கொண்டு சென்றது போல சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி அசத்தி இருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து கபாலிக்கா மலேஷியாவுக்கும் காலாவுக்காக மும்பைக்கும் பறந்த பா. ரஞ்சித் மீண்டும் வடசென்னை கதையை கையில் எடுத்து ஆர்யாவை வைத்து உருவாக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் சென்னையின் பல அடையாளங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறது. சென்னையை மையமாக வைத்து எத்தனை படங்கள் எடுத்தாலும் மினிமம் கேரண்டி ஹிட் என்பதும் கோலிவுட்டில் எழுதப்படாத விதியாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Here is the list of top movies which portrays Chennai city well in cinema for Madras 382 day special.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X