தமிழில் மகாதீரா!

சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா - காஜல் அகர்வால் நடிக்க ராஜமவுலி இயக்கிய இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரித்தது.
ஆந்திரத்தில் திரையிட்ட இடமெல்லாம் வசூலை வாரிக் குவித்தது இந்த ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர்.
இந்தப் படத்தை தமிழில் ரீமேக்க நான் நீ என பலரும் போட்டியிட்டனர். ஒரு கட்டத்தில் கலைப்புலி தாணு, இந்தப் படத்தை அஜீத்தை வைத்துத் தயாரிப்பதாக பேட்டி கூடக் கொடுத்தார்.
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இப்போது இந்தப் படத்தை அப்படியே டப் செய்து தமிழில் வெளியிடப்போவதாக கீதா ஆர்ட்ஸ் அறிவித்துள்ளது. ஜூன் அல்லது ஜூலையில் இந்தப் படம் வெளியாகும் என்று இந்நிறுவனத்தின் அல்லு சிரீஷ் கூறியுள்ளார்.
இந்தப் படத்தை தமிழாக்கி வெளியிடுவதற்காகவே சென்னையில் தங்கவிருப்பதாகவும், இதற்காக தங்களின் பழைய வீட்டைப் புதுப்பித்து குடிவரவிருப்பதாகவும் அல்லு சிரீஷ் தெரிவித்துள்ளார்.
மகாதீரா தெலுங்கில் 25 வாரங்களைத் தாண்டி ஓடிய படம். அந்தப் படம் தமிழில் வெற்றி பெற்றால் ராம்சரண் தேஜாவை நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











