மகாதீராவை தமிழில் மாவீரனாக வெளியிடும் உதயநிதி!

இந்தப் படத்தை தமிழில் கலைப்புலி தாணு தயாரிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.
இப்போது, அந்தப் படத்தை மாவீரன் என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
சரித்திரம் மற்றும் புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
சிரஞ்சீவியின் உறவினர் நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் இந்தப் படத்தை தெலுங்கில் தயாரித்தது. ரெட்ஜெயன்ட் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்தப் படம் தமிழில் வெளியாகிறது.
மாவீரன் என்பது 1988-ல் ரஜினி தயாரித்து நடித்து வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications