பொறுக்கி டூ மகாமகம் டூ சண்ட!

சுந்தர், ராகினி நடிக்க, ஷக்தி சிதம்பரம் இயக்கி, தயாரிக்கும் படம் மகாமகம். இப்படத்துக்கு முதலில் பொறுக்கி என நல்ல பெயரை சூட்டியிருந்தனர்.
இப்பெயர் தமிழ்க் கலாச்சாரத்திற்கு முரணாக உள்ளதாகவும், தவறான அர்த்தம் தொணிக்கும் வகையில் இருப்பதாலும், பெயரை மாற்றுமாறு தயாரிப்பாளர் கவுன்சில் ஷக்தி சிதம்பரத்தை அறிவுறுத்தியது.
அதை ஏற்ற ஷக்தி, படத்தின் கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் கும்பகோணத்தை மனதில் கொண்டு மகாமகம் என்ற பெயரை சூட்டினார்.
இந்த நிலையில் தற்போது அப்பெயரையும் மாற்றி விட்டாராம் ஷக்தி. படத்தின் நாயகனுக்கும், மற்றவர்களுக்கும் மகாமகம் என்ற பெயரில் முழுமையான உடன்பாடு ஏற்படாததால், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் சண்ட என்ற ெபயரை சூட்டியுள்ளார் ஷக்தி.
இதுதான் கடைசிப் பெயராம், இனிமேல் மாறாது என்று ஷக்தி தரப்பில் கூறப்படுகிறது.
இந்தப் பெயர் கூட இடிக்கிறா மாதிரிதான் இருக்கு!


Click it and Unblock the Notifications











