»   »  போட்டியில் வென்று நடிகையாகும் மகேஸ்வரி ஹீரோ ஹோண்டா நிறுவனம் நடத்திய நாளை நட்சத்திரம் போட்டியில் புதுமுக நடிகையாக மகேஸ்வரி என்பவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். புதுமுக நடிகராக மோகன் என்பவர் தேர்வானார்.இதன்மூலம் இந்த இருவரும் சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்துள்ளது.ஹீரோ ஹோண்டா நிறுவனமும், சத்யஜோதி பிலிம்சும் இணைந்து பிராட் மைண்ட் மற்றும் விஷன் ஈவென்ட் மேனேஜ்மென்ட்என்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின.திரையுலகில் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் சிறந்த நடிகை, நடிகரைத் தேர்வு செய்ய சென்னை, மதுரை, கோவைமற்றும் சேலம் ஆகிய நகர்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.நடிப்புத் திறன், ஆடல், உடலமைப்பு என பல தரப்பு விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தந்து போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரியும் ஆண்கள்,பெண்களும் பங்கேற்றனர்.இந்தப் போட்டிகளின் நடுவர்களாக 10 முன்னணி இயக்குனர்கள் இடம் பெற்றனர். அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் சிறந்தநடிகராக 3 பேரையும் சிறந்த நடிகையாக 3 பேரையும் தேர்வு செய்தனர்.இந்த 24 பேருக்கும் இறுதிப் போட்டி சென்னை சாந்தோம் மாண்ட் போர்ட் அரங்கில் நடந்தது.நடுவர்களாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், கேயார், ராமதாஸ் மற்றும் நடிகைலைலா ஆகியோர் இருந்தனர்.நடுவர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இந்த 12 புதுமுக நடிகைகளும் நடிகர்களும் தங்களது திறமையைக் காட்டினர்.5 சுற்றுக்களாக நடந்த இந்தப் போட்டிகளின் இறுதியில் சிறந்த நடிகராக சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவர் தேர்வானார்.சிறந்த நடிகையாக மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். இவரும் சென்னையைச் சேர்ந்தவரே. இவர் ஒரு கல்லூரி மாணவி.இதன் மூலம் இருவருக்குமே சினிமாவில் சேருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே இவர்களது திறமையைபரிசோதித்து தேர்வு செய்த இயக்குனர்களில் சிலர் மகேஸ்வரியை தங்களது படத்தில் புக் செய்ய முன் வந்துள்ளனர்.மோகனுக்கும் சிலர் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.இவர்கள் தேர்வு செய்யப்பட்ட இறுதிச் சுற்று நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பவுள்ளது. வரும் 21ம் தேதியும் 28ம் தேதியும் இந்தநிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன்மூலம் மேலும் பல சினிமா ஆட்களின் பார்வையில் இருவரும் பட வாய்ப்பு உருவாகியுள்ளது.ஏற்கனவே மகேஸ்வரி என்ற பெயரில் சினிமாவுக்கு வந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் இப்போது தெலுங்குக்குப்போய்விட்டார். அங்கு துக்கடா வேடங்களில் நடித்து காலம் தள்ளுகிறார். இதனால் இந்த புதிய மகேஸ்வரிக்குகோலிவுட்காரர்கள் புதிய பெயர் சூட்ட வேண்டிய அவசியமில்லை.அதே போல மைக் செட்காரர் மாதிரி மைக் பிடித்தே வாழ்ந்த மோகனும் இப்போது பீல்ட் அவுட். அதனால் இந்த புதியமோகனுக்கும் பெயர் பிரச்சனையில்லை.திறமையை வைத்து இந்த வாய்ப்பைப் பெற்றுள்ள மகேஸ்வரி, மோகனை வாழ்த்துவோம்.

போட்டியில் வென்று நடிகையாகும் மகேஸ்வரி ஹீரோ ஹோண்டா நிறுவனம் நடத்திய நாளை நட்சத்திரம் போட்டியில் புதுமுக நடிகையாக மகேஸ்வரி என்பவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். புதுமுக நடிகராக மோகன் என்பவர் தேர்வானார்.இதன்மூலம் இந்த இருவரும் சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்துள்ளது.ஹீரோ ஹோண்டா நிறுவனமும், சத்யஜோதி பிலிம்சும் இணைந்து பிராட் மைண்ட் மற்றும் விஷன் ஈவென்ட் மேனேஜ்மென்ட்என்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின.திரையுலகில் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் சிறந்த நடிகை, நடிகரைத் தேர்வு செய்ய சென்னை, மதுரை, கோவைமற்றும் சேலம் ஆகிய நகர்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.நடிப்புத் திறன், ஆடல், உடலமைப்பு என பல தரப்பு விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தந்து போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரியும் ஆண்கள்,பெண்களும் பங்கேற்றனர்.இந்தப் போட்டிகளின் நடுவர்களாக 10 முன்னணி இயக்குனர்கள் இடம் பெற்றனர். அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் சிறந்தநடிகராக 3 பேரையும் சிறந்த நடிகையாக 3 பேரையும் தேர்வு செய்தனர்.இந்த 24 பேருக்கும் இறுதிப் போட்டி சென்னை சாந்தோம் மாண்ட் போர்ட் அரங்கில் நடந்தது.நடுவர்களாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், கேயார், ராமதாஸ் மற்றும் நடிகைலைலா ஆகியோர் இருந்தனர்.நடுவர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இந்த 12 புதுமுக நடிகைகளும் நடிகர்களும் தங்களது திறமையைக் காட்டினர்.5 சுற்றுக்களாக நடந்த இந்தப் போட்டிகளின் இறுதியில் சிறந்த நடிகராக சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவர் தேர்வானார்.சிறந்த நடிகையாக மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். இவரும் சென்னையைச் சேர்ந்தவரே. இவர் ஒரு கல்லூரி மாணவி.இதன் மூலம் இருவருக்குமே சினிமாவில் சேருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே இவர்களது திறமையைபரிசோதித்து தேர்வு செய்த இயக்குனர்களில் சிலர் மகேஸ்வரியை தங்களது படத்தில் புக் செய்ய முன் வந்துள்ளனர்.மோகனுக்கும் சிலர் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.இவர்கள் தேர்வு செய்யப்பட்ட இறுதிச் சுற்று நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பவுள்ளது. வரும் 21ம் தேதியும் 28ம் தேதியும் இந்தநிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன்மூலம் மேலும் பல சினிமா ஆட்களின் பார்வையில் இருவரும் பட வாய்ப்பு உருவாகியுள்ளது.ஏற்கனவே மகேஸ்வரி என்ற பெயரில் சினிமாவுக்கு வந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் இப்போது தெலுங்குக்குப்போய்விட்டார். அங்கு துக்கடா வேடங்களில் நடித்து காலம் தள்ளுகிறார். இதனால் இந்த புதிய மகேஸ்வரிக்குகோலிவுட்காரர்கள் புதிய பெயர் சூட்ட வேண்டிய அவசியமில்லை.அதே போல மைக் செட்காரர் மாதிரி மைக் பிடித்தே வாழ்ந்த மோகனும் இப்போது பீல்ட் அவுட். அதனால் இந்த புதியமோகனுக்கும் பெயர் பிரச்சனையில்லை.திறமையை வைத்து இந்த வாய்ப்பைப் பெற்றுள்ள மகேஸ்வரி, மோகனை வாழ்த்துவோம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோ ஹோண்டா நிறுவனம் நடத்திய நாளை நட்சத்திரம் போட்டியில் புதுமுக நடிகையாக மகேஸ்வரி என்பவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். புதுமுக நடிகராக மோகன் என்பவர் தேர்வானார்.

இதன்மூலம் இந்த இருவரும் சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹீரோ ஹோண்டா நிறுவனமும், சத்யஜோதி பிலிம்சும் இணைந்து பிராட் மைண்ட் மற்றும் விஷன் ஈவென்ட் மேனேஜ்மென்ட்என்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின.

திரையுலகில் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் சிறந்த நடிகை, நடிகரைத் தேர்வு செய்ய சென்னை, மதுரை, கோவைமற்றும் சேலம் ஆகிய நகர்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.

நடிப்புத் திறன், ஆடல், உடலமைப்பு என பல தரப்பு விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தந்து போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரியும் ஆண்கள்,பெண்களும் பங்கேற்றனர்.

இந்தப் போட்டிகளின் நடுவர்களாக 10 முன்னணி இயக்குனர்கள் இடம் பெற்றனர். அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் சிறந்தநடிகராக 3 பேரையும் சிறந்த நடிகையாக 3 பேரையும் தேர்வு செய்தனர்.


இந்த 24 பேருக்கும் இறுதிப் போட்டி சென்னை சாந்தோம் மாண்ட் போர்ட் அரங்கில் நடந்தது.

நடுவர்களாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், கேயார், ராமதாஸ் மற்றும் நடிகைலைலா ஆகியோர் இருந்தனர்.

நடுவர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இந்த 12 புதுமுக நடிகைகளும் நடிகர்களும் தங்களது திறமையைக் காட்டினர்.

5 சுற்றுக்களாக நடந்த இந்தப் போட்டிகளின் இறுதியில் சிறந்த நடிகராக சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவர் தேர்வானார்.

சிறந்த நடிகையாக மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். இவரும் சென்னையைச் சேர்ந்தவரே. இவர் ஒரு கல்லூரி மாணவி.

இதன் மூலம் இருவருக்குமே சினிமாவில் சேருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே இவர்களது திறமையைபரிசோதித்து தேர்வு செய்த இயக்குனர்களில் சிலர் மகேஸ்வரியை தங்களது படத்தில் புக் செய்ய முன் வந்துள்ளனர்.

மோகனுக்கும் சிலர் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இவர்கள் தேர்வு செய்யப்பட்ட இறுதிச் சுற்று நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பவுள்ளது. வரும் 21ம் தேதியும் 28ம் தேதியும் இந்தநிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன்மூலம் மேலும் பல சினிமா ஆட்களின் பார்வையில் இருவரும் பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கனவே மகேஸ்வரி என்ற பெயரில் சினிமாவுக்கு வந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் இப்போது தெலுங்குக்குப்போய்விட்டார். அங்கு துக்கடா வேடங்களில் நடித்து காலம் தள்ளுகிறார். இதனால் இந்த புதிய மகேஸ்வரிக்குகோலிவுட்காரர்கள் புதிய பெயர் சூட்ட வேண்டிய அவசியமில்லை.

அதே போல மைக் செட்காரர் மாதிரி மைக் பிடித்தே வாழ்ந்த மோகனும் இப்போது பீல்ட் அவுட். அதனால் இந்த புதியமோகனுக்கும் பெயர் பிரச்சனையில்லை.

திறமையை வைத்து இந்த வாய்ப்பைப் பெற்றுள்ள மகேஸ்வரி, மோகனை வாழ்த்துவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil