»   »  வென்ற ஷில்பா-சோகத்தில் மகிமா!

வென்ற ஷில்பா-சோகத்தில் மகிமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பிரதர் நிகழ்ச்சியால் ஷில்பாவுக்குக் கிடைத்த வெற்றியை இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும்நிலையில் நடிகை மகிமா செளத்ரி மட்டும் விசனத்தோடு இருக்கிறாராம்.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி பல தடைகளைக் கடந்து வெற்றி வாகை சூடி பல கோடி ப>சுகளையும்அள்ளியுள்ளார். உண்மையில் இந்த வாய்ப்பு முதலில் நடிகை மகிமா செளத்ரிக்குத்தான் கிடைத்ததாம்.

ஆனால் வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம். அதன் பிறகே ஷில்பாவைத் தேடி பிக் பிரதர் போயுள்ளார்.தற்போது ஷில்பாவுக்குக் கிடைத்துள்ள பெருமையும், புகழும் மகிமாவை லேசாக ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு ஷில்பாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் மகிமா.

ஷில்பா வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் ஷில்பா.எல்லோருக்கும் அந்த்த திறமை வந்து விடாது. என்னால் இப்படி ஒரு வெற்றியைப் பெற்றிருக்க முடியுமாஎன்பது சந்தேகம்தான் என்று ஷில்பாவின் தில்லை ஒத்துக் கொள்கிறார் மகிமா.

அவரே தொடர்ந்து கூறுகையில், பாலிவுட் நட்சத்திரங்கள் பலருக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் வருகின்றன.ஆனால் எல்லோராலும் அவற்றை ஒப்புக் கொள்ள முடியவில்லை. என்னால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கமுடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால்தான் கலந்து கொள்ளவில்லை.

இதற்கு, நான் ஹாஸ்டலில் தங்கி வளர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹாஸ்டலில் என்ன நடக்கும்என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதை சமாளிக்க மன திடம் வேண்டும். அந்த அனுபவத்தால்தான் நான்பிக் பிரதர் ஷோவில் பங்கேற்கப் பயந்தேன்.

சின்னச் சின்னப் பிரச்சினைகள் வரும். கோஷ்டி சேர்ந்து கலாய்ப்பார்கள். அதெல்லாம் நமக்கு ஒத்துவராது,சமாளிக்க தைரியம் கிடையாது. ஆனால் ஷில்பா இதை எளிதாக சமாளித்து விட்டார் என்கிறார் மகிமா.

இதற்கிடையே, பிக் பிரதர் ராணி ஷில்பாவை, இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் கெளரவிக்கவுள்ளாராம்.அரண்மனைக்கு அழைத்து விருந்து கொடுத்து ஷில்பாவைக் கெளரவிக்க எலிசபெத் திட்டமிட்டுள்ளாராம்.

இதேபோல இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரை சந்திக்கவும் ஷில்பா திட்டமிட்டுள்ளார். மேலும், இங்கிலாந்துநாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார். இனவெறி சர்ச்சை எழுந்தபோது அதை இவர்கள்கண்டித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

ஷில்பாவை காமன்வெல்த் அமைப்பும் கெளரவிக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்காக மார்ச் மாதம் வரைலண்டனிலேயே தங்கி இருப்பாராம் ஷில்பா.

இன்னொரு முக்கிய அம்சமாக, ஷில்பாவின் கதையை படமாக்க சிலர் திட்டமிட்டுள்ளனர். கூடவே ஷில்பாவைகடுப்படித்த ஜேட் கூடியின் கதையையும் இதில் இணைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.

இதை விட சூப்பர் மேட்டராக ஷில்பா சொல்வதைக் கேளுங்கள். நான் இப்போது தனிமையில்தான்இருக்கிறேன். இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. யாராவது என்னைக் காதலித்தால் நானும் காதலிக்கத்தயார். ஆனால் சில கண்டிஷன்கள் என்று கூறி நிறுத்தும் ஷில்பா போடும் கண்டிஷன்களைப் பாருங்கள்.

எங்க அப்பா நிறையக் கேள்விகள் கேட்பார், அதை சமாளிக்கும் தைரியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

அப்புறம் நான் ரொம்ப செலவெல்லாம் வைக்க மாட்டேன். வைர நகைகள் மட்டும்தான் கேட்பேன், அதைமட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும் என்று குறும்புச் சிரிப்பால் விலாவை விலக வைக்கிறார்.

யெப்பேய்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil