»   »  காதலரை மணக்கிறார் மாளவிகா!

காதலரை மணக்கிறார் மாளவிகா!

Subscribe to Oneindia Tamil

வாள மீனு மாளவிகாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. காதலர் சுமேஷை அவர்மணக்கிறார்.

ஆரம்பத்தில் ஹீரோயினாகவும், பின்னர் குத்தாட்ட சுந்தரியாகவும் மாறி இப்போது வித்தியாசமான ரோல்களில்நடிக்கும் நாயகியாக கோலிவுட்டில் தொடர்ந்த நிலைத்து நடித்து வரும் மாளவிகாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம்நடந்து முடிந்துள்ளது.

அவர் மணக்கவிருப்பது மும்பையைச் சேர்ந்த சுமேஷ் என்ற தொழிலதிபரை. இவரை நீண்ட நாளாக காதலித்துவந்தாராம் மாளவிகா. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த 23ம் தேதி சத்தம் போடாமல் நடந்துமுடிந்துள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த காதல் கல்யாணத்தை நோக்கிச் சென்றுள்ளது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டனராம்.

முதலில் இந்த நிச்சயதார்த்த செய்தியை மறுத்த மாளவிகா கடைசியில் அதை ஒத்துக் கொண்டுள்ளார்.நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இன்னும் திருமண தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறும் மாளவிகா,திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நடிப்பாராம். இதற்கு சுமேஷும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன், வியாபாரி ஆகிய படங்களில் இணைந்து நடித்து வரும்மாளவிகாவையும், சூர்யாவையும் இணைத்து சமீபத்தில் கிசுகிசு கிளம்பியது. ஆனால் இப்போது திடீரெனகாதலரை மணக்கப் போகிறார் மாளவிகா என்ற செய்தி வெளியாகியுள்ளது.

கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்ட பின்னரே கல்யாணத்திற்கு கழுத்தை நீட்டப் போகிறார்மாளவிகா. அதன் பின்னர் தேனிலவை முடித்து விட்டு வந்து புதிய படங்களை ஒப்புக் கொள்வாராம்.

வாளமீனுக்கும், மும்பை மீனுக்கும் கல்யாணம்!

Read more about: malavika to marry lover
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil