For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாள மீனு விழுந்த கதை!

  By Staff
  |

  வாள மீனு மாளவிகாவை காதலித்து கைப் பிடிக்கப் போகும் சுமேஷ் மேனன்கேரளத்தைச் சேர்ந்தவராம்.

  மாளவிகாவை சுமேஷ் பிடித்த கதை சுவாரஸ்யமானது.

  மாளவிகாவின் அம்மா ஐஸ்வர்யா, அப்பா கொன்னூர் ஐரு. இவர்கள் கர்நாடகத்தைச்சேர்ந்தவர்கள். அப்பா ஒரு ராணுவ அதிகாரி. ஸோ, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும்இடம் மாறிக் கொண்டே இருப்பார். அப்படித்தான் சில வருடங்களாக பெங்களூரில்வேலை பார்த்து வருகிறார் கொன்னூர்.

  இதனால் ஐஸ்வர்யாவும் கணவருடன் பெங்களூருக்கு வந்து விட்டார். ஆனால் மாளுமட்டும் மும்பையில் உள்ள தங்களது சொந்த பங்களாவில் வசித்து வந்தாராம்.அவ்வப்போது பெங்களூர், சென்னைக்கு வந்து படங்களில் தலையை காட்டினாலும்பெரும்பாலும் தங்குவது மும்பையில் தான்.

  மும்பைக்கார மாடர்ன் பெண் என்பதால் பார்ட்டிகளும், மது புட்டிகளும் புதிதல்ல.பெரிய பெரிய புள்ளிகள், திரையுலகினர், தொழிலதிபர்கள் என பலரும் மாளவிகாகலந்து கொள்ளும் பார்ட்டிகளுக்கு வருவார்களாம். அப்படி வந்தவர்தான் சுமேஷ்.

  மாளுவைப் பார்த்த மாத்திரத்திலே அவருக்கு காதல் பிறந்து விட்டதாம். நல்லநட்புடன் இருவரும் பழக ஆரம்பித்தனர். ஆனால் அது காதலாக மாறி விட்டது. தனதுகாதலை மாளுவிடம் சொல்ல தன் அக்கா சுனிதா மேனனின் உதவியை நாடினாராம்சுமேஷ்.

  இங்கே சுனிதா குறித்த ஒரு சிறு குறிப்பு. சுனிதா பாலிவுட்டில் ரொம்ப பேமஸானவர்.அதாவது இவர் ஒரு நியூமராலாஜிஸ்ட். ராசி பார்த்து பெயர் வைக்க இவரைத்தான்பாலிவுட்காரர்கள் அணுகுவார்கள். இவர் சொல்வதை அப்படியே வேத வாக்காகஎடுத்துக் கொள்வார்களாம். அப்படி ஒரு செல்வாக்கு, சுனிதாவின் சொல் வாக்குக்குஉண்டு.

  தம்பியின் காதலுக்கு உதவ சுனிதா முன் வந்து மாளவிகாவிடம் அதை உடைத்தார்.இதையடுத்து சுமேஷுடன் நெடுநேரம் தனியாகப் பேசினாராம் மாளு. முடிவில்சுமேஷின் காதலை மாளவிகா ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்தே மும்பையில்உள்ள மாளவிகாவின் வீட்டில் சத்தம் போடாமல் நிச்சயதார்த்தத்தை முடித்தார்கலாம்.

  இதில் பாலிவுட் பிரபலங்களும், ரீமா சென் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது எப்போது கல்யாணம், எப்படி செய்வது,படங்களை முடித்து விட்டு கல்யாணத்தை வைத்துக் கொள்வது உள்ளிட்ட பலமேட்டர்களை பேசி முடித்துள்ளனர்.

  தற்போது மாளு கைவசம் உள்ள சபரி, வியாபாரி, திருமகன், கட்டுவிரியன்,அப்படிப்போடு ஆகிய படங்களை முடித்து விட்டு கல்யாணம் செய்யஉத்தேசித்துள்ளார்களாம். இதனால் இந்தப் படங்களில் தனது கேரக்டர்களை வேகமாகமுடிக்குமாறு சம்பந்தப்பட்ட இயக்குநர்களைக் கோரியுள்ளாராம் மாளவிகா.

  அவர்களும் மாளவிகாவைப் பிரிய மனம் இல்லாமல் வேக வேகமாக மாளவகாவின்போர்ஷனை முடித்து வருகிறார்களாம். சமீபத்தில் சபரி படப்பிடிப்புக்காக மாளவிகா,பங்ாங்காக் சென்றிருந்தார். கூடவே சுமேஷும் ஒட்டிக் கொண்டு கிளம்பி விட்டாராம்.

  படப்பிடிப்புக்குப் பாதகம் இல்லாமல் பாங்காக் நகரை வலம் வந்துள்ளனர் சுமேஷும்,மாளுவும். ஜேம்ஸ்பாண்ட் தீவில் கிட்டத்தட்ட புதுமணத் தம்பதிகள் போலவே படுசுதந்திரமாக சுற்றி லூட்டியடித்துள்ளனர்.

  பாங்காக் பயணத்தை முடித்து விட்டு மும்பை திரும்பும் வழியில் அதே விமானத்தில்ஷ்ரியாவும், தனது காதலருடன் கடலை போட்டபடி பயணித்துள்ளார். எதிர்பாராமல்சுமேஷையும், மாளவிகாவையும் சந்தித்த ஷ்ரியா, கல்யாண மேட்டரைக்கேள்விப்பட்டு இருவரது கைகளையும் பிடித்து ஒரு குலுக்கு குலுக்கி வாழ்த்துசொல்லி விட்டு கடலையைத் தொடர்ந்தாராம்.

  Read more about: malavikas love story
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X