»   »  வாள மீனின் அழைப்பு!

வாள மீனின் அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

மாளவிகாவுக்கு கல்யாணக் களை படு ஜோராக கூடி வருகிறது. கல்யாண அழைப்பிதழ்களை நெருங்கியவர்களுக்கு அவரே நேரில் போய்க்கொடுத்து வருகிறார்.

ஹீரோயினாக, குத்தாட்ட குமரியாக கொந்தளித்துக் கொண்டிருந்த மாளவிகா, ஒரு வழியாக சம்சார சாகரத்தில் குதித்து குடும்பம் நடத்தப்போகிறார். கேரளத்து சுமேஷ் மேனனுக்கும், அவருக்கும் 7ம் தேதி கல்யாணம் நிச்சமாகியுள்ளது. பெங்களூரில் திருமண ஏற்பாடுகள்கோலாகலமாக நடந்து வருகின்றன.

திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பலரையும் அழைக்கிறார் மாளவிகா. நெருங்கியவர்களுக்கு நேரில் போய் புன்னகை சிந்த அழைப்பிதழைக்கொடுத்து வருகிறார்.

தனக்கு ரொம்பப் பிடித்த குஷ்பு, ஜோதிகா, ரீமா சென், சிம்பு, ரஞ்சிதா, ஷாம் என பலருக்கும் நேரில் போய் மாளவிகா இன்விடேஷன்கொடுத்துள்ளார். இதுதவிர தான் நடித்து வரும் படங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் திருமண அழைப்பிதழைக் கொடுத்து வருகிறார்.

கல்யாணத்திற்குப் பிறகும் நடிப்பேன் என்று ஏற்கனவே மாளவிகா அறிவித்திருந்தார். அதுவும் வழக்கம் போல கிளாமாராகவும் நடிப்பேன் என்றும்கூறியிருந்தார். அதில் சிறு திருத்தம், மிதமிஞ்சி கிளாமர் மட்டும் காட்ட மாட்டாராம். எல்லாம் வருங்காலக் கணவரின் அன்புக் கட்டளையாம்.

கல்யாணத்திற்குப் பின்னர் கொஞ்ச நாள் தேனிலவுக்காக கணவருடன் மாலத்தீவுக்குப் பறக்கிறார். தேனிலாவை சீரும், சிறப்புமாக கொண்டாடியபின்னர் பெங்களூர் திரும்புகிறார். அதற்குப் பிறகு புதிய படங்களில் நடிப்பாராம் (வாய்ப்பு வந்தால்!)

கல்யாணத்தை நடத்தி வைக்கப் போகும் திமிங்கலம் யாருங்கோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil