மாளவிகாவும் செட்டில்டு!
நடிகை மாளவிகாவுக்கும், காதலர் சுமேஷ் மேனனுக்கும் இன்று பெங்களூர் கோவிலில் எளிமையாக திருமணம் நடந்தேறியது.
உன்னைத் தேடி மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மாளவிகா பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியானசித்திரம்பேசுதடியில் வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு படு பிரபலமானார்.அவரும், மும்பையைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் சுமேஷ் மேனனும் காதலித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் கல்யாணம்நிச்சயமானது.
இன்று பிற்பகல் 12 மணியளவில் பெங்களூரில் உள்ள பிரபல சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
எளிமையாக நடந்த இந்தத் திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டனர். திரையுலகிலிருந்து நடிகைகள் ரீமா சென், ஸ்வாதி, நடிகர் அப்பாஸ்ஆகியோர் மட்டும் கலந்து கொண்டனர். சென்னையைச் சேர்ந்த சில பி.ஆர்.ஓக்களையும் கூட கல்யாணத்தில் பார்க்க முடிந்தது.
கல்யாணத்தை கோவிலில் முடித்துக் கொண்டு ராணுவ மையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு கப்பன் பூங்கா சாலையில்உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சூப்பர் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications